நான் தேர்தலில் போட்டியிடவில்லை! ஆனால் நீங்கள் தவறாமல் யாருக்கு வாக்களிக்க வேண்டும்? காரணத்தோடு அறிவித்த ரஜினிகாந்த்!  - Seithipunal
Seithipunal


நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்து விட்டேன் என்று 2017 டிசம்பர் 31ம் தேதி  அறிவித்தவர் ஆனால் இதுவரை கட்சியின் பெயரை அறிவிக்கவில்லை. அதற்கு பதிலாக அவரது பெயரில் மன்றம் என்ற ஒன்றை தொடங்கி அதற்கு நிர்வாகிகளையும் நியமித்து வருகிறார். இதற்கிடையே திரைப்படங்களில் நடிக்க சென்றுவிட்டார். இருந்தபோதிலும் ஒரு சில நிகழ்வுகளுக்கு பேட்டி அளித்துக் கொண்டிருந்தார். 

தேர்தலில் கட்சியாக போட்டியிடுவதற்காக தேர்தல் நடைபெறுவதற்கு நான்கு மாதங்களுக்கு முன்பே அரசியல் கட்சிகளை பதிவு செய்து இருக்க வேண்டும் என்ற நிலையில், அதனை ரஜினி செய்யவில்லை. அதனால் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் ஒரு கட்சி சார்பாக போட்டியிட முடியாது என்ற சூழ்நிலையில் தான் ரஜினிகாந்த் இருந்தார். தேர்தலில் போட்டியிட போவதில்லை என்று முன்கூட்டியே உறுதியான இந்நிலையில் அதனை உறுதி செய்யும் விதமாக இன்று காலை 32 மாவட்ட செயலாளர்களை அழைத்து தனது வீட்டில் ஆலோசனை நடத்திய அவர், வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட போவதில்லை என அறிவித்துவிட்டார். 

மேலும் வேறு எந்த கட்சிக்கும் ஆதரவளிக்கப்போவதில்லை எனவும் என்னுடைய மன்ற கொடியையும், பெயரையும் எந்த கட்சியினரும் தேர்தல் பிரச்சாரத்தில் பயன்படுத்தக் கூடாது எனவும் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். மேலும் அவருடைய இலக்கு அடுத்து நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தல் தான் எனவும் அவர் தெரிவித்துள்ளார். 

இதற்கடுத்தபடியாக யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதையும் அவர் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டின் முக்கிய பிரச்சனை தண்ணீர், வரவிருக்கும் தேர்தலில் மத்தியில் நிலையான, வலுவான ஆட்சி அமைத்து யார் தமிழ்நாட்டின் தண்ணீர் பிரச்சனையை நிரந்திரமாக தீர்த்து வைக்கக் கூடிய திட்டங்களை வகுத்து அதை உறுதியாக செயல் படுத்துவார்கள் என்று நம்புகிறீர்களோ, அவர்களுக்கு நீங்கள் சிந்தித்து ஆராய்ந்து தவறாமல் வாக்களிக்கும் படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். வாழ்க தமிழ்.. வளர்க தமிழ் நாடு... ஜெய்ஹிந்த் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

who is your best choice in parliament said rajinikanth


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->