நாளை நடக்கப்போகும் நிகழ்ச்சி.! பரபரப்பாகி சூடு பிடிக்கும் அரசியல்களம்.!! எட்டாக்கனியை பிடிக்க ஏணி போடுகிறதா?.!!  - Seithipunal
Seithipunal


இந்திய பாராளுமன்றத்தின் 16 வது கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவு பெற்ற நிலையில்., வரும் 17 ம் மக்களவை உறுப்பினர்களை தேர்வு செய்யும் பாராளுமன்ற தேர்தலானது விரைவில் நடைபெற உள்ளது. இந்த தேர்தலின் தேதி வரும் வாரங்களில் வெளியாகலாம் என்று எதிர்பார்த்து கொண்டு அனைத்து அரசியல் கட்சிகளும் தங்களின் ஆட்சியை பிடிக்க முனைப்பு காட்டி வருகிறது. 

மத்தியில் பாரதிய ஜனதா கட்சியும் - காங்கிரஸ் கட்சியும் ஆட்சியை கைப்பற்றுவதைக்காக அதிகளவில் முனைப்பு காட்டிக்கொண்டு வருகிறது. இந்த இரண்டு கட்சிகளும் இல்லாத ஆட்சியை சில மாநிலங்களில் மேற்கொள்வதற்கு திரிணாமுல் காங்கிரஸ் கட்சி மேற்கொண்டு வரும் நிலையில்., பாராளுமன்ற தேர்தலுக்கு போட்டியிடும் வேட்பாளர்களின் விருப்ப மனுக்கள் பெறப்பட்டு வருகிறது. 

இந்த சமயத்தில் அரசியல் களமே சூடேறியிருக்கும் நிலையில்., நாளை இந்தியாவின் தற்போதைய பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த மாநிலத்தில்., தனது முதற்கட்ட பாராளுமன்ற தேர்தலுக்கான பிரச்சாரத்தை தொடங்கவுள்ளார். குஜராத் மாநிலத்தில் இருக்கும் வல்சாத் மாவட்டத்தில் உள்ள லால்டுங்ரியில் நடைபெறும் காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு நாளை உரையாற்றவுள்ளார். 

கடந்த 2017 ம் வருடம் நடைபெற்ற குஜராத் சட்டசபை தேர்தலுக்கு பிரச்சாரம் செய்ய வந்த ராகுல் காந்தி., காங்கிரஸ் கட்சியின் தலைவராக பதிவியேற்ற பின்னர் தற்போது முதன் முதலாக வருகை தருகிறார் என்ற காரணத்தால்., தேவையான வரவேற்புகளை அந்த மாநிலத்தின் காங்கிரஸ் கட்சி பிரமுகர்கள் மேற்கொண்டு வருகின்றனர். 

அந்த தேர்தலில் மொத்தம் உள்ள 182 சட்டசபை உறுப்பினர்களின் எண்ணிக்கையில் 77 இடங்களை கைப்பற்றியது. பாரதிய ஜனதா கட்சியானது சுமார் 99 இடங்களை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது. அதே போன்று 2009 ம் வருடம் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலின் போது சுமார் 11 எம்.பிக்களை கொண்ட காங்கிரஸ் கட்சியானது., கடந்த 2014 ம் வருடம் நடைபெற்ற குஜராத் நாடாளுமன்ற தொகுதியில் சுமார் 26 எண்ணிக்கையில் ஒரு தொகுதிகள் கூட வெற்றிபெறவில்லை., பாரதிய ஜனதா கட்சியானது அமோக வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tomorrow ragul Gandhi start parliament election meeting in Gujarat


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->