தேர்தல் நேரத்தில்... டிடிவி-க்கு ஷாக் கொடுத்த முக்கிய புள்ளி.!! குஷியில் ஈபிஎஸ்.!! - Seithipunal
Seithipunal


தமிழ்நாட்டில் பாஜக தலைமையான தேசிய ஜனநாயக கூட்டணியில் டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திற்கு இரண்டு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. 

அதன்படி தேனி மற்றும் திருச்சி தொகுதிகள் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் டிடிவி தினகரன் நேரடியாக தேனி தொகுதியில் களமிறங்குகிறார். 

டிடிவி தினகரனுக்காக தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர் செல்வத்தின் மகனமான ரவீந்திரநாத் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். இந்த தொகுதியில் கடந்த தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் போட்டியிட்ட தங்க தமிழ்ச்செல்வன் இந்த முறை திமுக சார்பில் போட்டியிடுகிறார். 

இதனால் தேனி தொகுதியில் யார் வெற்றி பெறுவார்கள் என்று எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ள நிலையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தைச் சேர்ந்த நிர்வாகி அதிமுகவில் இணைந்துள்ளார். அம்மா மக்கள் முன்னேற்ற கழக தேனி நகர இணை செயலாளர் மகாராஜன் அக்கட்சியில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்திருப்பது டிடிவி தினகரனை அதிர்ச்சியில் ஆழ்த்திள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Theni AMMK city secretary joined in AIADMK


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->