#BigBreaking : சொத்துக்குவிப்பு வழக்கு..EX. மினிஸ்டர் எஸ்.பி.வேலுமணிக்கு அதிர்ச்சி கொடுத்த உச்சநீதிமன்றம்.! - Seithipunal
Seithipunal


அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான சொத்துக்குவிப்பு வழக்கை ரத்து செய்ய மறுத்த சென்னை உயர் நீதிமன்றத்தின், உத்தரவை மீறி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த நிலையில், அவரது மனு தள்ளுபடி செய்யபட்டுள்ளது. 

கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் சென்னை, கோவை மாநகராட்சிகளில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகளுக்கு டெண்டர் கோரியதில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறி, முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யக் கோரி அறப்போர் இயக்கம் மற்றும் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ் பாரதி ஆகியோர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

ஆட்சி மாற்றத்திற்கு பின், ஆளும் திமுக அரசு டெண்டர் முறைகேடு மற்றும் வருமானத்துக்கு அதிகமாக 58 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக குற்றம் சாட்டி, எஸ்பி வேலுமணி மீது இரண்டு வழக்குகளை பதிவு செய்தது. இதற்கிடையே, தனக்கு எதிராக தொடரப்பட்ட இந்த வழக்குகளை ரத்து செய்யக் கோரி எஸ்பி வேலுமணி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கின் விசாரணை நீதிபதிகள் பி என் பிரகாஷ் மற்றும் டீக்கா ராமன் அடங்கிய அமர்வு, எஸ்பி வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கை ரத்து செய்தும், அவருக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கை ரத்து செய்ய மறுத்தும் உத்தரவிட்டனர். 

இதையடுத்து, எஸ்.பி.வேலுமணி சொத்துக்குவிப்பு வழக்கை ரத்து செய்ய மறுத்த சென்னை உயர் நீதிமன்றத்தின், உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த நிலையில், அவரது மனு இன்று உச்சநீதிமன்ற நீதிபதிகளால் தள்ளுபடி செய்யபட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Sp velumani request Suspended by Supremecourt 


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->