அதிமுகவுக்கு சசிகலா ஆதரவு.? வெளியான பரபரப்பு தகவல்.!! - Seithipunal
Seithipunal


முன்னாள் முதலமைச்சரும், அதிமுக பொதுச் செயலாளரராகவும் இருந்த செல்வி ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு கட்சியில் ஏற்பட்ட உட்கட்சி பூசல் மற்றும் குழப்பங்கள் காரணமாக அப்போது இடைக்கால பொதுச் செயலாளராக வி.கே சசிகலா மற்றும் துணை பொதுச்செயலாளராக டிடிவி தினகரன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். 

மேலும் தமிழக முதலமைச்சராக வி.கே சசிகலாவை தேர்ந்தெடுக்கப்படுவதற்கான பணிகளிலும் அதிமுக ஈடுபட்டது. ஆனால் சசிகலாவுக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கில் அவர் தண்டனை பெற்றதால் அதிமுக எம்எல்ஏக்களால் எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 

இதனால் அதிருப்தி அடைந்த ஓ.பன்னீர்செல்வம் தனது தலைமையில் 10 இயலும் எம்எல்ஏக்களுடன் சேர்ந்து அதிமுக ஆட்சிக்கு எதிராக வாக்களித்தார். அதனைத் தொடர்ந்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்களின் தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெற்றது . அந்தத் தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுக ஆட்சி அமைந்தது. 

மேலும் வி.கே சசிகலா மற்றும் டிடிவி தினகரன் கட்சியில் இருந்து நீக்க வேண்டும், அதிமுக ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் உருவாக்கி அதில் ஒருங்கிணைப்பாளராக தன்னை நியமிக்க வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் நிபந்தனை விதித்ததை ஏற்றுக் கொண்டதை அடுத்து அவர் மீண்டும் அதிமுகவில் சேர்க்கப்பட்டார். 

இதற்கிடையே சிறை தண்டனை முடித்து வெளியே வந்த வி.கே சசிகலா நான்தான் அதிமுகவின் பொதுச்செயலாளர் என கூறி சென்னை நீதிமன்றத்தில் உரிமையியல் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு தற்போதும் நடைபெற்று வருகிறது. அதன்பிறகு அதிமுகவில் ஏற்பட்ட உட்கட்சி பூசல் காரணமாக பொதுக்குழுவின் மூலம் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவருடைய ஆதரவாளர்கள் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டனர். 

இதனை அடுத்து ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த வடக்குகள் எல்லாம் நிறைவு பெற்று அதிமுக தற்போது முழுமையாக எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் செயல்பட்டு வருகிறது. எதிர்வரும் மக்களவைப் பொதுத் தேர்தலில் அதிமுக தலைமையில் கூட்டணி அமைக்கப்பட்டு 40 தொகுதிகளிலும் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். 

அதேவேளையில் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரனுடன் கைகோர்த்து பாஜக தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்று மக்களவைத் தேர்தலில் போட்டியிடுகின்றனர். மூன்று முறை முதலமைச்சராக இருந்த பன்னீர்செல்வத்திற்கு ராமநாதபுரம் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. டிடிவி தினகரனுக்கு தேனி மற்றும் திருச்சி தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. 

இந்த தேர்தலில் தேனியில் டிடிவி தினகரன் வாக்கு சேகரித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஜூன் 4ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடிந்த பிறகு அதிமுக தொண்டர்கள் டிடிவி தினகரன் பின்பு வரிசை கட்டி நிற்பார்கள் என பேசியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

அண்ணாமலையின் இத்தகைய பேச்சுக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியும் பதிலடி கொடுத்துள்ளார். இந்த நிலையில் வி.கே. சசிகலா தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ள எம்ஜிஆர் நாளேட்டில்இன்று வெளியாகி உள்ள தலையங்கம் அரசியல் வட்டாரத்தில் புயலை கிளப்பி உள்ளது. அந்த நாளேட்டில் இதய தெய்வம் அம்மாவின் எண்ணம் நிச்சயம் நிறைவேறும் என்ற தலைப்பில் "கழகத் தொண்டர்கள் அனைவரும் இன்றைக்கும் நான் சொல்லிக் கொள்வது ஒன்றுதான். 

அதாவது, இயக்கம் அழிந்தாலும் பரவாயில்லை எப்படியாவது பதவிகளை தட்டி பறிக்க வேண்டும் என்று தாண்டி உதிப்பவர்களை எண்ணி யாரும் சிறிதும் கவலைப்படாதீர்கள். அவர்கள் எண்ணம் தவறானது. இயக்கத்திற்கு எதிரானது என்பது வெளிப்படுகின்ற காலம் வந்துவிட்டது. 

உண்மையான கழகத் தொண்டர்களின் பேராதரவோடு நம் இயக்கம் சீரோடும் சிறப்பு ஓடும் செழிக்கிறது. இதை யாராலும் தடுக்க முடியாது. அதேபோன்று இன்னும் நூறு ஆண்டுகள் ஆனாலும் இந்த இயக்கம் மக்களுக்காகவே இயங்கும் என்று சூலுரைத்த நம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் எண்ணமும் நிச்சயம் ஈடேறும்" என அந்த தலையங்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற பொது தேர்தல் தமிழகத்தில் நடைபெற இன்னும் மூன்று நாட்களே உள்ள நிலையில் வி.கே சசிகலாவின் இந்த கருத்து மறைமுகமாக அதிமுகவிற்கு அளிக்கும் ஆதரவாக இருக்கும் அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Sasikala indirectly support AIADMK eps


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->