மோடியின் அடுத்த அதிரடி.?! 12 இலட்சம் கோடி கடன் தள்ளுபடி.!! பரபரப்பாக இந்திய அரசியல் களம்.!! - Seithipunal
Seithipunal


சத்தீஸ்கர் மாநிலத்தில் பழங்குடியினர் மாநாட்டில் கலந்து கொண்ட காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் ராகுல் காந்தி ஆளும் மத்திய அரசு மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளார். அவர் அந்த மாநாட்டில் பேசியதில், பிரதமர் மோடி அவர்கள், தொழிலதிபர்களின் 12 இலட்சம் கோடி கடனை தள்ளுபடி செய்ய திட்டமிட்டுள்ளதாக தெரிவித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், ராகுல் காந்தி அந்த மாநாட்டில் பேசியதாவது, ''விவசாயிகளுக்கு நாள் ஒன்றுக்கு ரூ 3.50 மட்டும் அளிக்கும் மத்திய அரசு, அனில் அம்பானி, விஜய் மல்லையா, மெகுல் சோக்‌ஷி, லலித்மோடி, நீரவ் மோடி போன்ற தொழில் அதிபர்களுக்கு கோடிக்கணக்கில் பணம் அளித்துள்ளது. பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு வருடம் 6 ஆயிரம் ரூபாய்அறிவித்த போது பாஜக எம்.பி.க்கள் மேஜையை தட்டிது , அவர்களுக்கே நகைச்சுவையாக இல்லையா?

மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்தால் அனைவரது வங்கி கணக்கிலும் தலா ரூ. 15 லட்சம் செலுத்தப்படும  2 கோடி வேலை வாய்ப்புகளை உருவாக்குவோம் என்று மோடி அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. இந்திய மக்களை கடும் இன்னலுக்கு உண்டாக்கிய பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் கருப்பு பணம் மீட்கப்பட்டதா?.

பொது மக்கள் வரி பணம், தொழில் அதிபர்களின் கடனை தள்ளுபடி செய்ய பயன்படுத்தப்பட்டுள்ளது. இது மட்டுமில்லாமல், மேலும் தொழில் அதிபர்களின் ரூ. 12 லட்சம் கோடி கடனை தள்ளுபடி செய்ய மோடி திட்டமிட்டுள்ளார். .

மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும் ஜிஎஸ்டி வரி முறை மாற்றி அமைக்கப்படும். விவசாயிகளுக்கு குறைந்தபட்ச வருமானம் கிடைப்பது உறுதி செய்யப்படும்'' என்று ராகுல் காந்தி அந்த மாநாட்டில் தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

rahul open talk about modi next plan


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->