சசிகலா நீக்கியது செல்லும்! ஓபிஎஸ் தரப்பு நீதிமன்றத்தில் வாதம்.!! - Seithipunal
Seithipunal


முன்னாள் முதலமைச்சரும், அதிமுக பொதுச்செயலாளராகவும் இருந்த ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக சசிகலா மற்றும் துணைப் பொதுச் செயலாளராக தினகரன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். அதன் பிறகு 2017 ஆம் ஆண்டு அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் உருவாக்கப்பட்டன. 

அதனைத் தொடர்ந்து சசிகலா மற்றும் தினகரன் ஆகியோர் கட்சியிலிருந்து நீக்குவதாக அதிமுக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. 

இந்த வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி செந்தில்குமார் மற்றும் சுப்பிரமணியன் ஆகியோர் அமர்வின் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது 2016 ஆம் ஆண்டு இடைக்கால பொதுச் செயலாளராக சசிகலா தேர்ந்தெடுக்கப்படும் கூட்டத்திற்கான நோட்டீசை யார் அனுப்பியது என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதில் அளித்த அதிமுக தரப்பு வழக்கறிஞர் கடந்த 2016 மற்றும் 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுக்குழு கூட்டங்களுக்கு தலைமைக் கழகம் சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டதாகவும், அதில் எடுக்கப்பட்ட முடிவுகளை உச்ச நீதிமன்றமும் உயர்நீதிமன்றமும் உறுதி செய்துள்ளதாகவும் வாதிட்டார். 

அதிமுக அடிப்படை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எடப்பாடி பழனிச்சாமி தற்போது அதிமுகவின் பொதுச் செயலாளர் எனவும், வேட்பாளருக்கான சின்னம் ஒதுக்குவதற்கான விண்ணப்பத்தில் கையெழுத்து விடுவதற்கு அவருக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது. இதனை தேர்தல் ஆணையம் அங்கீகரித்து உள்ளது எனவும் தெரிவித்தார்.

மேலும் கட்சியின் வளர்ச்சிக்காக சட்ட விதிகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில் பழைய விதிகளை அடிப்படையாகக் கொண்டு சசிகலா வழக்கு தொடர முடியாது. கட்சியின் அடிப்படை அமைப்பு எதுவும் மாற்றப்படவில்லை என வாதிட்டார்.

ஓ.பன்னீர்செல்வம் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கடந்த 2017 ஆம் ஆண்டு நடந்த பொதுக்குழு கூட்டத்தில் இடைக்கால பொதுச் செயலாளர் பதவி நீக்கப்பட்ட ஒருங்கிணைப்பாளராக பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிச்சாமியும் நீடிப்பப்பதால் இடைக்கால பொதுச் செயலாளராக சசிகலா நீக்கப்பட்டது செல்லும் எனவும் வாதிட்டார்.

இதனைத் தொடர்ந்து எடப்பாடி பழனிச்சாமி சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கடந்த ஆண்டு நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் நீக்கப்பட்டு தற்போது பொதுச்செயலாளர் பதவி உருவாக்கப்பட்டு அதிமுகவின் பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என வாதிடப்பட்டது. இந்த நிலையில் வாதங்கள் முடிவடையாததால் இந்த வழக்கின் விசாரணை நவம்பர் 6-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ops argued in MadrasHC against Sasikala removed will go


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->