சொத்து குவிப்பு வழக்கு - இடியாக வந்த தீர்ப்பு.! ஓ.பி.எஸ்.,க்கு‌ அதிர்ச்சி.!! - Seithipunal
Seithipunal


முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் வருமானத்திற்கு அதிகமாக சொத்துக் குவித்ததாக தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டது. இந்த வழக்கை விசாரித்த கீழமை நீதிமன்றம் ஓபிஎஸ்-க்கு எதிரான குற்றச்சாட்டுகளை நிரூபிக்க தவறியதால் அவரை விடுதலை செய்வதாக அறிவித்து தீர்ப்பு வழங்கியது.

கிழமை நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்ற சிறப்பு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வத்தின் மீதான சொத்து குவிப்பு வழக்கை மறுவிசாரணைக்கு எடுத்துக் கொண்டார். 

நீதிபதி ஆனந்த வெங்கடேஷ் தாமாக முன்வந்து மறுவிசாரணைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஓ பன்னீர்செல்வம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். 

இந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை நடைபெற்று வந்த நிலையில் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது. அந்த தீர்ப்பில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக ஓ பன்னீர்செல்வம் மீதான வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற சிறப்பு நீதிபதி ஆனந்த வெங்கடேஷ் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டதற்கு தடை விதிக்க முடியாது என தெரிவித்த உச்ச நீதிமன்றம் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து அதிரடியாக‌ உத்தரவு பிறப்பித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ops appeal petition disposed by supremecourt


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->