ஓ.பி.எஸ் - இ.பி.எஸ் கூட்டாக அறிவிப்பு..! இன்னும் சற்று நேரத்தில் கொண்டாட்டத்தில் துள்ளிக்குதிக்கப் போகும் அதிமுகவினர்.! - Seithipunal
Seithipunal


மறைந்த நடிகரும், தமிழக முன்னாள் முதல்வருமான டாக்டர் எம்ஜி. ராமசந்திரன் அவர்கள் 1917 ஆம் வருடம், ஜனவரி 17 -ல் பிறந்தார். இவர் பிறந்து 100 ஆண்டுகள் முடிவடைகிறது.

இதையடுத்து அதிமுக அரசு, கடந்த வருடம் தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டத்திலும் பல கோடி ரூபாய் செலவு செய்து எம்ஜிஆர் நூற்றாண்டு தொடக்க விழாவை சிறப்பாக கொண்டாடியது.

இதனை தொடர்ந்து நடந்த நிறைவு விழாவில், எம்ஜிஆரின் உருவம் பொறிக்கப்பட்ட ரூ 5 மற்றும் ரூ 100 நாணயங்கள் வரும் ஜனவரியில் வெளியிடப்படும் என்று முதல்வரும், துணை முதல்வரும் அறிவித்தனர்.

எம்.ஜி.ஆரின் பிறந்த தினமான இன்று (ஜனவரி 17) சென்னையில் நடைபெற உள்ள நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்துகொண்டு எம்ஜிஆரின் உருவம் பொறிக்கப்பட்ட ரூ 5 மற்றும் ரூ 100 நாணயங்கள் வெளியிடுவார் என கூறப்பட்டது.

ஆனால் தற்போது எந்தவித ஆடம்பரமும் இன்றி சத்தமில்லாமல் எம்ஜிஆரின் உருவம் பொறிக்கப்பட்ட நாணயம் வெளியீட்டு விழா நடைபெற உள்ளது.

முன்னதாக இன்று காலை விழா ஏற்பாடு இல்லாமல் எம்ஜிஆர் நூற்றாண்டு வளைவு திறக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக தமிழகம் முழுவதும் எம்ஜிஆர் பிறந்த நாள் விழா தமிழகம் முழுவதும் அதிமுகவினரால் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், நூற்றாண்டு விழா நினைவாக எம்ஜிஆர் உருவம் பொறித்த சிறப்பு நாணயம் இன்று வெளியிடப்படுகிறது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி இந்த சிறப்பு நாணயத்தை வெளியிடுகிறார்.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

mgr coin to be release today


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->