தேர்தல் அவசரத்தில், திறக்கப்பட்ட மெட்ரோ நிலையம்.. மழை நீர் பெருக்கெடுத்ததால் ஆத்திரத்தில் மக்கள்.! - Seithipunal
Seithipunal


பாரதப் பிரதமர் மோடி அவர்களால் திறந்து வைக்கப்பட்ட மெட்ரோ ரயில் நிலையத்திற்குள் பெங்களூரில் பெய்த கனமழையினால் தண்ணீர் புகுந்த சம்பவம் மக்களிடம் எதிர்ப்பை உருவாக்கி இருக்கிறது.

பெங்களூர் மக்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஒயிட் ஃபீல்டு முதல் கே ஆர் புரம் வரையிலான மெட்ரோ ரயில் பாதையை மார்ச் 25ஆம் தேதி பிரதமர் மோடி திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பிரதமருடன் கர்நாடக மாநில முதல்வர் மற்றும் ரயில்வே நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.

மெட்ரோ ரயில் நிலையம்  திறக்கப்பட்டு ஒரு  வாரமே ஆன நிலையில் கடந்த சில தினங்களாக பெங்களூருவில் பெய்து வரும் கனமழையால் இந்த மெட்ரோ ரயில் நிலையத்திற்குள் தண்ணீர்  வந்தது.  இதனால் பொதுமக்கள் கடும்  அவதிக்கு உள்ளாகினர். மேலும் இது தொடர்பாக ஆளும் கட்சிக்கு எதிரான  கருத்துக்களும் அதிகரித்து வருகிறது.

இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள எதிர்க்கட்சியினர் கர்நாடகாவில் ஆளும் பாஜக அரசு முழுவதுமாக நிறைவுறாத திட்டங்களையும் மே மாதம் நடக்க இருக்கின்ற சட்டப்பேரவை தேர்தலை கருத்தில் கொண்டு அவசரமாக திறந்து வைப்பதாக குற்றம் சாட்டியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

metro in begaluru flood with rain water people blame ruing party


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->