ஓபிஎஸ், இபிஎஸ்க்கு இந்த நேரத்தில் இப்படி ஒரு சோதனையா?! நாளை நடக்கப்போவது என்ன? பதற்றத்தின் உச்சியில் அதிமுக வட்டாரம்!   - Seithipunal
Seithipunal


அதிமுக அமைப்பை மாற்றிய ஓபிஎஸ், ஈபிஎஸ் ஆகியோருக்கு எதிராக முன்னாள்  எம்பி கே.சி.பழனிசாமி தொடர்ந்த வழக்கானது, டெல்லி உயர்நீதிமன்றத்தில் நாளை மீண்டும் விசாரணைக்கு வருகிறது. இந்த விவகாரத்தில் ஆரம்பம் முதலே கே.சி.பழனிசாமி அதிமுகவுக்கு பெரும் தலைவலியாக இருந்து வருகிறார். 

இந்தியா முழுவதும் நடைபெற உள்ள மக்களவை தேர்தல்  தமிழகத்தில் 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் உடன் ஏப்ரல் 18-ம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. இதனையடுத்து அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள்  அறிவிக்கப்பட்டுள்ளார்கள். இந்நிலையில் அதிமுகவின் முன்னாள் உறுப்பினர் கே.சி.பழனிசாமி டெல்லி உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு முக்கியத்துவம் பெற்றுள்ளது. 

அந்த வழக்கில் அதிமுகவின் கொள்கை விதிகளில் மாற்றம் செய்து, பொதுசெயலாளர் பதவி நீக்கபட்டு ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் உருவாக்கப்பட்டது சட்ட விதிகளுக்கு புறம்பானது, என்பதால் வேட்பாளர்களின் வேட்புமனுவில் ஓபிஎஸ், ஈபிஎஸ் கையெழுத்திட தடை விதிக்க வேண்டும் என தெரிவித்திருந்தார். 

வழக்கை விசாரித்த நீதிபதிகள் வழக்கை மார்ச் 28-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர். மேலும் அன்றைய தினமே தீர்ப்பு வழங்கப்படும் என நீதிபதி கூறியிருந்தார். ஆனால் மார்ச் 26 ஆம் தேதியே வேட்புமனு தாக்கல் முடிந்துவிடும் என்பதால் இந்த வழக்கை அவசரமாக விசாரிக்கக் கோரி கே.சி.பழனிசாமி தரப்பில் நேற்று டெல்லி உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது. இதனையடுத்து இந்த வழக்கு நாளைக்கு விசாரணைக்கு வருகிறது. 

எல்லாம் மேல இருக்குறவங்க பார்த்துப்பாங்க சார், என்பது போல  ஓபிஎஸ், இபிஎஸ் கெத்தாக வலம் வந்து கொண்டிருக்கிறார்கள். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

kc palanisamy case


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->