எடப்பாடி காலி... அதிமுகவே இருக்காது.. திமுக அமைச்சரின் ஆவேச பேச்சு.!! - Seithipunal
Seithipunal


நாடாளுமன்ற பொது தேர்தலுக்கு பிறகு அதிமுக என்ற கட்சியே இருக்காது என திமுக அமைச்சர் அனிதா கிருஷ்ணன் பேசியுள்ளார். தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் நடைபெற்ற திமுக பொதுக் கூட்டத்தில் பேசிய அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் "எடப்பாடி பழனிச்சாமி குறித்து நாம் பேச வேண்டியது இல்லை. இந்த தேர்தல் முடிந்த பிறகு அதிமுக என்ற கட்சி இருக்குமா என்பதை சந்தேகம்தான். 

மேடை ஏறி ஒரு சிலர் அது இது என பேசுகிறார்கள். பேசட்டுமே... அடுத்து இங்க தானே வந்து ஆகணும். எடப்பாடி முடிஞ்சு போச்சு.. அடுத்து டிடிவி இருக்காரு... ஓபிஎஸ்னா யார்னு உங்களுக்கு தெரியும்.. இதுவரை கட்சி நிர்வாகிகள் நன்றாக பணியாற்றியுள்ளனர். ஒற்றுமையாக பணியாற்ற வேண்டும். 

எனவே எதிர்வரும் தேர்தலில் எடப்பாடி வேட்பாளரையும் பிஜேபி வேட்பாளரையும் டெபாசிட் காலி செய்யும் பணியை சபதமாக ஏற்று நீங்கள் செயல்பட வேண்டும் என தொண்டர்கள் மத்தியில் ஆவேசமாக பேசினார் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DMK anitha radhakrishnan said Aiadmk no more after election


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->