நெருங்கு தேர்தல்: வடசென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தேர்தல் பிரசாரம்! - Seithipunal
Seithipunal


நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் 19ஆம் தேதி முதல் 7 கட்டங்களாக நடைபெற உள்ளதால் அனைத்து அரசியல் கட்சியினரும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

தமிழகம், புதுச்சேரியில் உள்ள 40 பாராளுமன்ற தொகுதியிலும் முதற்கட்ட தேர்தல் நடைபெற உள்ளது. இந்த 40 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு வருகின்ற 19ஆம் தேதி நடைபெற உள்ளது. 

தேர்தலுக்கு இன்னும் மூன்று நாட்கள் உள்ள நிலையில் தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தலுக்கான பிரசாரம் நாளை மாலை 6 மணியுடன் முடிவடைகிறது. 

இந்நிலையில் வடசென்னை தொகுதியில் இன்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் காலை முதல் பிரச்சாரம் மேற்கொண்டார். சென்னை ஜி.கே.எம் காலணியில் வீதி வீதியாக நடந்து சென்ற பகுதியில் உள்ள பொதுமக்களை சந்தித்து முதலமைச்சர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். 

இன்று மாலை காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் ஸ்டாலின் தி.மு.க வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். 

கடந்த மார்ச் 22 ஆம் தேதி தேர்தல் பிரசாரத்தை தொடங்கிய முதல்வர் இதுவரை 36 பாராளுமன்ற தொகுதிகளில் பிரசாரத்தை நிறைவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

CM Stalin election campaign north Chennai


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->