பாஜக போட்டியிடப்போகும் 5 தொகுதிகள்.. அதற்கான வேட்பாளர்கள் யார்? வெளியான தகவல்.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் இரு தினங்களாக மக்களவைத் தேர்தலுக்கான கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளதை அடுத்து தமிழக அரசியல் களம் பரபரப்பாக செயல்படத் தொடங்கியுள்ளது. 

மக்களவைத் தேர்தலுக்கான அதிமுக கூட்டணி உறுதியாகி உள்ளது. அதிமுக - பாமக - பாஜக இணைந்து இந்த தேர்தலை சந்திக்க உள்ளது. இதில் அதிமுக - பாமக - பாஜக கூட்டணி இறுதியாகி உள்ளது.

பாமக - அதிமுக ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன்படி 7 பாராளுமன்ற தொகுதிகளில் அதிமுக கூட்டணியில் பாமக போட்டியிட இருக்கிறது. அதேபோல் ராஜ்ய சபா சீட் ஒன்றும் பாமகவிற்கு அளிக்கப்படும் என்று அதிமுக தெரிவித்துள்ளது.

பாஜகவிற்கு மொத்தம் 8 தொகுதிகள் அதிமுக அணியில் ஒதுக்கப்பட்டுள்ளது. பாஜக கூட்டணி கட்சிகளான புதிய தமிழகம், புதிய நீதிக்கட்சி மற்றும் இந்திய ஜனநாயகக் கட்சி ஆகிய கட்சிக்கு ஒரு தொகுதி விதம் 3 தொகுதிகள் ஒதுக்கியுள்ளது. தேமுதிகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

இந்நிலையில், பாஜக, தங்களுக்கான  5 தொகுதிகள் எவை?, அதற்கான வேட்பாளர்கள் யார்? என்பதை தேர்வும் செய்யும் பணியை துவக்கி நடத்தி வருகின்றனர். முதல் கட்டமாக ஒரு தகவல் கசிந்துள்ளது. அதில் 5 தொகுதிகள் எவை? வேட்பாளர்கள் யார் என்பது குறித்து.

1. திருச்சி:  தமிழிசை செளந்தரராஜன்
2. கன்னியாகுமாரி: பொன்.ராதாகிருஷ்ணன்
3. திருநெல்வேலி: நைனார் நாகேந்திரன்
4. கோவை:  சி.பி ராதாகிருஷ்ணன்
5. திருப்பூர்: வானதி சீனிவாசன்

இதில், கன்னியாகுமரி, கோவை, திருநெல்வேலி தொகுதி வேட்பாளர்களில் மாற்றம் இருப்பதற்கான வாய்ப்பு குறைவு. திருச்சி தொகுதியை கைப்பற்ற கருப்பு முருகானந்தமும், திருப்பூர் தொகுதியை கைப்பற்ற ஹெச்.ராஜாவும் முயற்சி செய்வதாக கூறப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

bjp volumes and candidates list


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->