தேர்தலுக்கு பின் முதல்வரின் நாற்காலி முறிந்துவிடும்.. பாஜக எம்.பி-யின் பேச்சால் வெடித்த சர்ச்சை.!! - Seithipunal
Seithipunal


நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்த நிலையில் தேர்தலுக்குப் பின் கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையாவின் முதல்வர் நாற்காலி முறிந்து விடும் என பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் சதானந்தகவுடா பேசியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உளளது. 

கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையா மற்றும் துணை முதல்வர் சிவகுமாரின் நாற்காலிகளில் இருந்து நான்கு கால்கள் மூன்று கால்களாக மாறி இருப்பதாகவும் நாடாளுமன்ற தேர்தலுக்குப் பின் அந்த நாற்காலி முறிந்து வடும் எனவும் பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் சதானந்தகவுடா கூறியுள்ளார். 

அவரின் இத்தகைய பேச்சு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆப்ரேஷன் கமலா மூலம் காங்கிரஸ் எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கி மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சியை கவிழ்க்க பாஜக திட்டமிட்டு வருவதாக சித்தராமையா குற்றம் சாட்டி வரும் நிலையில் சதானந்த கவுடாவின் பேச்சு அதை உறுதிப்படுத்துவது போல் உள்ளது.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

BJP MP sadananda Gowda said CM chair will be broken


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->