கோடை காலங்களில் ஏற்படும் நோய் தொற்று எற்படாமலிருக்க சில டிப்ஸ் - Seithipunal
Seithipunal


குளிர் காலத்தில் நம்மை ஒரு சில நோய்கள் தாக்கும் என்றால் கோடைகாலத்திலும்  ஒரு சில நோய்கள்  தாக்கும். அவற்றில் முக்கியமானது கிருமிகளால் நமக்கு ஏற்படும்  ஃபுட் பாய்சன்  ஆகும். இதுபோன்று கிருமிகளால் ஏற்படும்  தொற்றுக்களில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள என்ன செய்யலாம் என்று பார்ப்போம்.

ஃபுட் பாய்சன் மற்றும் கிருமிகளின் தொற்று ஏற்படாமல் இருக்க நம் சமையலறை மற்றும் குளிர்சாதன பெட்டி ஆகியவற்றை தூய்மையாக வைத்துக் கொள்வது நல்லது  இதன் மூலம் பாக்டீரியா தொற்றுக்களில் இருந்து  நம்மை பாதுகாத்துக் கொள்ள உதவும்.

வாரம் ஒரு முறை குளிர்சாதன பெட்டிகளை சோடா உப்பு மற்றும் தண்ணீர் கலந்து சுத்தம் செய்வதன் மூலம் கிருமி தொற்று ஏற்படாமல் காத்துக் கொள்ள உதவும்.

சமையலறையில் அடிக்கடி பயன்படுத்தும் துணிகளை நன்கு சுத்தம் செய்து பயன்படுத்துவதன் மூலம்  கிருமி தொற்று ஏற்படாமல் பாதுகாக்கலாம்.

இறைச்சி போன்ற பொருட்களை  குளிர்சாதன பெட்டியில் வைக்கும் போது பிளாஸ்டிக் கவரில் போட்டு வைப்பதன் மூலம்  அவற்றில் கிருமி தொற்று ஏற்படாமல் தடுக்க முடியும். வேலூர் அவற்றை பயன்படுத்துவதற்கு முன் மஞ்சள்  கலந்து சுத்தம் செய்வதன் மூலமும்  கிருமி தொற்றை தவிர்க்கலாம்.

அதிகமான எண்ணெய் பொருட்களை பயன்படுத்துவதை கோடை காலங்களில் தவிர்ப்பது நல்லது. இதன் காரணமாக  ஏற்படும் வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு போன்றவற்றை தவிர்க்க முடியும்.

கோடை காலங்களில் அடிக்கடி குளிரூட்டப்பட்ட பானங்களை பருகுவதையும் தவிர்க்கலாம். இவற்றை பருகுவது நமக்கு புத்துணர்ச்சியை தருவது போல் இருந்தாலும் குறைவாக நீர் இழப்பை ஏற்படுத்தக் கூடியவை.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

What can be done to avoid food poisoning during summers


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->