மீனவர்கள் இரவு நேரங்களில் மீன்பிடிக்கச் செல்லுவது இதற்காக தானா.?! - Seithipunal
Seithipunal


இரவில் மீன்பிடிக்கச் செல்லுதல் ஏன்?

பகலில் சூரிய வெப்பம் கடலிலும், தரையிலும் ஒரே அளவாக இருந்தாலும் கடலை விடத் தரை சூடாக இருக்கும். இதனால் தரையின் வெப்பநிலை கூட அதற்கு மேலேயுள்ள காற்று, வெப்பநிலை கூடி மேலே செல்லும். அது இருந்த இடத்துக்கு கடலின் மேலுள்ள காற்று வரும். இவ்வாறு கடலில் இருந்து தரையை நோக்கி வருவது கடற்காற்று ஆகும்.

பகலில் விரைவில் சூட்டைப் பெற்ற தரை இரவில் விரைவில் வெப்பத்தை இழக்கும். ஆறுதலாக வெப்பத்தைப் பெற்ற கடலும் வெப்பத்தை இழக்கும். இதனால் தரையை விட, கடல் கூடிய வெப்பநிலை உடையதாக இருக்கும். எனவே கடலின் மேலுள்ள காற்று வெப்பத்தால் மேலே செல்ல தரையின் மேலுள்ள காற்று கடலை நோக்கி செல்லும். இதுவே தரைக்காற்று ஆகும். 

இரவில் தரைக்காற்று வீசுவதால், அதாவது தரையில் இருந்து கடலை நோக்கிக் காற்று வீசுவதால் மீன்பிடிக்கச் செல்பவர்களின் படகு இலகுவாக கடலுக்குள் செல்லும்.

மேலும், இரவில் மீன்கள் கடலின் மேற்பரப்புக்கு வருவதும் இரவில் மீன்பிடிக்கச் செல்ல காரணமாகும்.

பயம், கோபம் ஏற்படும் பொழுது ஒருவரின் இதயத் துடிப்பு ஏன் அதிகரிக்கின்றது?

பயம், கோபம் ஏற்படும் வேளைகளில் அதிரனற் சுரப்பிகள் தூண்டப்படுகின்றன. இதனால் அதிரனலின் என்னும் ஓமோன் சுரக்கப்படும்.

அதிரனலின் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கூட்டும் மற்றும் தசைகளில் ரத்த சுற்றோட்டத்தை அதிகரிக்கும். 

எனவே, ரத்த சுற்றோட்டம் அதிகரிப்பதால் இதயத்துடிப்பு அதிகரிக்கின்றது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

reason for fishers working On night Time


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->