கூடவே இருந்து கொண்டு, உள்ளே நடப்பதை எல்லாம் கட்டுரையாக வெளிவிட்ட பா.ஜ.க பிரபலம்..!! கடவுளின் ஸ்லீப்பர் செல்லா? - Seithipunal
Seithipunal


புள்ளி விவரங்களைச் சொல்லி பொருளாதாரத்தை வளர்த்து விட முடியாது என்று மோடியை நேரடியாகவே அவர் தாக்கியுள்ளார்.மராட்டிய மாநிலம் அகோலா நகரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில்,

அவர் இதுதொடர்பாக மேலும் பேசியது,

பொருளாதார நெருக்கடியை நாம் ஏற்கெனவே சந்தித்து வருகிறோம்; அப்படி இருக்கும் போது.எண்ணிக்கை மற்றும் புள்ளி விவரங்களில் என்ன இருக்கிறது?

எண்களால் ஒரு விஷயத்தை நிரூபிக்க முடியும். அதே எண்களால் மறு தரப்பின்வாதத்தையும் நிரூபிக்க முடியும்.

மத்திய அரசின் தலைவர் (பிரதமர் மோடி) சமீபத்தில் தனது ஒரு மணிநேர உரையில் இந்தியாவின் வளர்ச்சியை காட்டுவதற்காக பல்வேறு எண்களை குறிப்பிட்டார்.

ஏராளமான மோட்டார் சைக்கிள்களும், கார்களும் விற்பனை செய்யப்பட்டதாக அவர்கூறினார். அதற்கு இந்தியா முன்னேறுகிறது என்று அர்த்தமா? விற்பனை இருக்கிறது. ஆனால் உற்பத்தி நடக்கிறதா? என்பதுதான் கேள்வி.

இந்த நிகழ்ச்சியில், பணமதிப்புநீக்க நடவடிக்கை குறித்து பேசப்போதில்லை. அந்த பேச்சை நான் தவிர்க்கிறேன். தோற்றுப்போன ஒரு விஷயம் குறித்து என்ன பேசுவது? என்பதுதான்

அதற்கு காரணம். ஜி.எஸ்.டி. வரிவிதிப்பானது சிறந்த மற்றும் எளிய வரிவிதிப்பு என்றுமத்திய அரசு கூறுகிறது.

இந்த வரிவிதிப்பு சிறந்ததாகவும், எளிதானதாகவும் இருந்திருக்க முடியும். ஆனால் ஆட்சியில் இருப்பவர்கள் அதை மோசமானதாகவும், சிக்கல் நிறைந்ததாகவும் ஆக்கிவிட்டனர்.

தற்போதைய ஆட்சியின் பொருளாதாரக் கொள்கைகளை விமர்சிக்க அதைவிட கடுமையான வார்த்தை தேவைப்படுகிறது.ஜி.எஸ்.டி வரிவிதிப்பின் அமலாக்கத்தில் உள்ள முரண்பாடுகளை களைவது அரசின் கடமையாகும்.

அரசின் மீது மக்கள் சக்தியின் கண்காணிப்பு இருக்க வேண்டும் என்பது சோசலிச தலைவர் ஜெயப்பிரகாஷ் நாராயணன் கருத்தாகும்.

அதையே நான் வலியுறுத்துகிறேன். மக்கள் சக்திதான் மத்திய அரசை கட்டுப்படுத்த வேண்டும்.

பொருளாதார நிலைமை குறித்துமத்திய அரசை விமர்சித்து சமீபத்தில்நான் ஒரு கட்டுரை எழுதி இருந்தேன்.

இந்த விஷயத்தில் தாங்கள் நினைப்பதையே நான் கூறியிருப்பதாக மக்கள் கருதுகிறார்கள். இவ்வாறு யஷ்வந்த் சின்ஹா பேசியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

yeshwant sinka speech against modi about GST


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->