மனித நேயம் தான் பெரியது..! ரமலான் நோம்பை கைவிட்ட இஸ்லாமியர்..!! - Seithipunal
Seithipunal


பீகாரில் நோயால் பாதிக்கப்பட்ட 8 வயது சிறுவனின் உயிரைக் காப்பாற்ற இஸ்லாமியர் ஒருவர் தான் கடைப்பிடித்து வந்த ரமலான் நோம்பை தான் பெரிதென கைவிட்டர்.

பாட்னாவில் உடல் நலக்குறைவால் சாதர் மருத்துவமனையில் அவசரப்பிரிவில் ராஜேஷ் என்ற 8வயது சிறுவன் அனுமதித்துயுள்ளனர்.

அவரை சோதித்துப் பார்த்த மருத்துவர் அவருக்கு அதிக்கப்படியான ஹீமோகுளோபின் உற்பத்தியாகும் "தலசீமியா" நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரத்தத்தை வாரத்து 3-4 முறை மாற்ற வேண்டும். 

ராஜேஷ்க்கு அரிய வகை ரத்தம் என்பதால் ரத்த வங்கிகளில், ராஜேஷின் தந்தை முயற்சித்தும் கிடைக்கவில்லை. 200 கி.மீ. தூரத்தில் உள்ள குச்சாய்கோட் ரத்த வங்கிக்கும் சென்றும் பயனில்லை. வேண்டுமென்றால் ஒரிரு நாளில் ஏற்பாடு செய்வதாக கை விரித்துவிட்டனர். 

ராஜேஷின் நிலை குறித்து மருத்துவமனையில் சுத்தம் செய்யும் பணியில் இருக்கும் ஒருவர் மாவட்ட ரத்த தான குழு உறுப்பினர் அன்வர் ஹுசைனுக்கு தெரிவித்துள்ளார். அன்வர் அந்த குழுவில் உறுப்பினராக உள்ள ஜாவித் ஆலமிடம் கேட்டுயிருக்கிறார். 

தற்போது ரமலான் மாதம் என்பதால் நோன்பு இஸ்லாமியர்களுக்கு மிகவும் முக்கியமானதாகும். 5 முறை தொழுகை, நோன்பு இருப்பது வாழ்நாள் கடைமையாக ஜாவித் ஆலம் கருதுபவர். நோன்பு காலத்தில் ரத்தம் சிந்துவதோ, வெளியேறுவதோ கூடாது. அப்படி செய்தால் நோன்பு முறிந்துவிடும். 

ஆனால் ஜாவித் அதைப் பற்றி எதையும் யோசிக்காமல் ரத்தம் கொடுக்க முன்வந்தார். மருத்துவர்கள் உணவு எடுத்துக் கொண்டால் தான் ரத்தம் எடுப்போம் என தெரிவித்தனர். அதனால் உணவு எடுத்துக் கொண்டு ரத்தம் கொடுத்து ராஜேஷை காப்பாற்றியுள்ளார்.

ஜாவித் கூறும் போது, எங்கள் மதத்தில் நோன்பை விட மனிதாபி மானம் தான் முக்கியம் என கூறுகிறது. அதனால் நோன்பை கைவிட்டு ரத்தம் கொடுத்தேன். நோன்பு முறிந்ததால் எனக்கு எந்த வருத்தமுமில்லை. என தெரிவித்து மனிதாபிமானத்தை முன் நிறுத்தினர். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ramalan is muslim who abandoned the num


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->