யாத்திரைக்கு பிரேக் விட்ட ராகுல் காந்தி: காரணம் என்ன? - Seithipunal
Seithipunal


காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான ராகுல் காந்தி உத்தர பிரதேசத்தில் இந்திய ஒற்றுமை யாத்திரையை இன்று நடத்தினார். 

இந்நிலையில் இந்திய ஒற்றுமை யாத்திரை வருகின்ற 26 ஆம் தேதி முதல் மார்ச் 1ஆம் தேதி வரை 5 நாட்களுக்கு நாட்கள் ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது என காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயராம் ரமேஷ் தெரிவித்துள்ளார். 

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது, இந்திய ஒற்றுமை யாத்திரைக்கு வருகின்ற 26 ஆம் தேதி முதல் மார்ச் 1ஆம் தேதி வரை 5 நாட்கள் ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. 

ராகுல் காந்தி, கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் மாணவர்களிடையே உரையாற்றுவதற்காக லண்டன் செல்ல உள்ளார். 

மேலும் வருகின்ற 27 மற்றும் 28ஆம் தேதிகளில் மாணவர்கள் இடையே ராகுல் காந்தி உரையாற்றுவார். அதன் பிறகு நாடு திரும்பும் ராகுல் காந்தி டெல்லியில் முக்கிய கூட்டங்களில் பங்கேற்று பின்னர் ராஜஸ்தானில் மார்ச் 2 ஆம் தேதி மீண்டும் இந்திய ஒற்றுமை யாத்திரையை தொடங்குவார் என குறிப்பிடப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Rahul Gandhi break Yatra 


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->