குண்டு வெடிப்புக்கு ''நான் தான்" காரணம்.. முன்னுக்கு பின் பேசிய "குஜராத்தி".! 2 பேரிடம் தீவிர விசாரணை!! - Seithipunal
Seithipunal


கேரள மாநிலம் எர்ணாகுளம் அடுத்த களமச்சேரி பகுதியில் நடைபெற்ற கிறிஸ்தவ மதத்தினரின் வருடாந்திர ஜெப கூட்டத்தில் இன்று காலை 9:30 மணி அளவில் தொடர்ந்து 3 குண்டுகள் வெடித்ததில் சம்பவ இடத்திலேயே ஒரு பெண் உயிரிழந்த நிலையில் மேலும் இருவர் உயிரிழந்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த சம்பவத்தில் 36 பேர் படுகாயம் அடைந்ததில் அதில் பலர் கவலைக்கிடமாக உள்ளனர்.

இந்த குண்டுவெடிப்பு சம்பவம் குறித்து கேரள மாநில போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் டிபன் பாக்ஸ்களில் கொண்டுவரப்பட்டிருந்த வெடிகுண்டு வெடித்தது என்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் குற்றவாளிகளை பிடிக்க 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக கேரள மாநில டிஜிபி தெரிவித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து கேரளாவில் இன்று அரங்கேறிய தொடர் குண்டு வெடிப்பு சம்பவம் குறித்து தேசிய புலனாய்வு அமைப்பு தனது விசாரணையை தொடங்கிய நிலையில் தேசிய பாதுகாப்பு படை மற்றும் கேரள தீவிரவாத தடுப்பு பிரிவு உள்ளிட்ட அமைப்புகளும் விசாரணையில் இறங்கியுள்ளது.

இதற்கிடையே குண்டுவெடிப்பு நிகழ்ந்த இடத்திலிருந்து நீல நிற சொகுசு கார் ஒன்று வேகமாக சென்ற காட்சியை வைத்து அந்த நபரை தேடும் பணி மும்முறமாக நடைபெற்று வருகிறது.

இதற்கிடைய கொடைகரை காவல் நிலையத்திற்கு வந்த ஒரு நபர் தான் எர்ணாகுளத்தை சேர்ந்தவர் என்றும், களச்சேரி குண்டுவெடிப்பை நடத்தியது நான் தான் எனவும் கூறியுள்ளார். அந்த நபரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 

இந்நிலையில் கண்ணூர் ரயில் நிலையத்தில் குஜராத் மாநிலத்தை சேர்ந்த நபர் ஒருவரை சந்தேகத்தின் பெயரில்  பிடித்து விசாரணை செய்தபோது அவருடைய பேச்சில் சந்தேகம் ஏற்பட்டதை அடுத்து அவரை ரயில்வே காவல் நிலையம் கொண்டு சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கேரளாவில் இன்று காலை நடந்த தொடர் வெடிகுண்டு சம்பவத்தால் மாநிலம் முழுவதும் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

One person surrenders at police station in Kerala blast incident


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->