மலப்புரம் | 11 குடும்பஸ்ரீ உறுப்பினர்களுக்கு லாட்டரி டிக்கெட் மூலம் அடித்த ஜாக்பாட்! - Seithipunal
Seithipunal


மலப்புரம்: கேரள மாநிலத்தில் 11 குடும்பஸ்ரீ உறுப்பினர்கள் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் கூட்டாக சேர்ந்து ரூ.250 மதிப்புள்ள லாட்டரி டிக்கெட்டை வாங்கியுள்ளனர். அவர்கள் தற்போது அந்த லாட்டரி டிக்கெட்டில் ரூ.10 கோடியை பரிசாக வென்றுள்ளனர்:

கேரள மாநிலத்தில் வறுமை ஒழிப்பு மற்றும் பெண்கள் மேம்பாடு போன்றவற்றை சார்ந்த அமல்படுத்தப்பட்ட 'குடும்பஸ்ரீ மிஷனின்' ஒரு பகுதியாக மலப்புரம் மாவட்டத்தில் உள்ள பரப்பனங்காடி நகராட்சியில் 11 பெண்கள் ஹரிதா கர்மா சேனாவில் பணியாற்றி வருகின்றனர். 

11 பேரும் வறியவர்கள். அந்த பகுதியில் உள்ள வீடுகளுக்கு சென்று மக்காத குப்பைகளை சேகரிப்பது தான் இவர்களது பணியாகும்.

இவர்கள் 11 பேரும் இணைந்து ஒரு லாட்டரி டிக்கெட்டை 250 ரூபாய்க்கு வாங்கியுள்ளனர். இந்த முயற்சியை தங்களது அதிர்ஷ்டத்தை சோதிக்கும் வகையில் முன்னெடுத்துள்ளனர். 

இந்நிலையில் அவர்கள் வாங்கிய லாட்டரி டிக்கெட் ஜாக்பாட் அடித்து, அதன் மூலம் ரூ.10 கோடி வென்றுள்ளனர். இந்த டிக்கெட் அந்த மாநில அரசின் மழைக்கால பம்பர் லாட்டரி என்பது தெரியவந்தது.

தற்போது பரப்பனங்காடி பஞ்சாப் நேஷனல் வங்கியில், அவர்கள் வாங்கிய டிக்கெட் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த பரிசுத் தொகையில் வரி மற்றும் முகவருக்கு சேர வேண்டிய கமிஷன் போக மீதமுள்ள தொகையை 11 பேரில் ஒருவரது வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Malappuram lottery ticket jackpot with 11 Kudumbashree members


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->