இலவச மகளிர் பேருந்து.. இத்தனை கட்டுப்பாடுகளா.? ஆவேசமடைந்த காங்கிரஸ் எம்எல்ஏ.!  - Seithipunal
Seithipunal


கர்நாடக மாநிலத்தில் நடைபெற்று முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சியானது பாஜகவை தோற்கடித்து வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது. காங்கிரஸ் கட்சி தேர்தலில் வெற்றி பெற பொது மக்களுக்கு பல்வேறு வாக்குறுதிகளை அளித்தது.

அவற்றில் ஒன்றுதான் மகளிருக்கு இலவச பேருந்து பயண திட்டம். இந்த பெண்களுக்கான இலவச பேருந்து பயண திட்டம் சமீபத்தில் அமலுக்கு வந்தது. இதில் பயணிக்க பெண்களுக்கு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது.

இந்த கட்டுப்பாடுகளால் தற்போது எதிர்க்கட்சியினர் பல்வேறு குற்றச்சாட்டுகளை அடுக்கியுள்ளனர். இந்த விதிமுறைகள் குறித்து காங்கிரஸின் மூத்த எம்எல்ஏ சாமனூர் சிவசங்கரப்பா விமர்சித்துள்ளார். அதன்படி, "கர்நாடக மாநில பெண்களுக்கு மட்டும் இலவச பயணத்தை உறுதி செய்யும் பொருட்டு அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. 

மற்ற மாநில பெண் பயணிகளுக்கும் இலவச பயணத்தை அனுமதிக்க வேண்டும். பெண்கள் என்றால் எல்லோரும் பெண்கள் தான். ஏன் இத்தனை ஆவணங்கள் கேட்கப்படுகிறது என்பது தெரியவில்லை.?" என தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Karnataka women Free Bus conditions makes shock To congress mla


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->