ஆட்டம் ஆரம்பமா? பொக்ரானில் இந்தியா இராணுவம் நடத்திய பிரம்மாண்ட போர் ஒத்திகை.!! - Seithipunal
Seithipunal


கடந்த வியாழக்கிழமை அன்று ஜம்மு-காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் இந்திய துணை ராணுவ வீரர்கள் சென்ற பேருந்து மீது பாகிஸ்தானை தலைமையிடமாக கொண்டு இயங்கும் பயங்கரவாத அமைப்பு நடத்திய தாக்குதலில், இந்திய துணை இராணுவ வீரர்கள் 40 க்கும் மேற்பட்டவர்கள் வீர மரணம் அடைந்தனர். 

இந்த தாக்குதல் சம்பவத்திற்கு அமெரிக்க, ரஷ்ய உலக நாடுகள் பலவும் தங்களது கண்டனங்களை பாகிஸ்தான் அரசுக்கு தெரிவித்து வருகின்றனர். மேலும், இந்தியா எடுக்கும் அணைத்து நடவடிக்கைகளுக்கும் ஆதரவு அளிப்பதாக தெரிவித்துள்ளன. மேலும் இந்த தாக்குதல் சம்பவத்திற்கு பிரதமர் மோடி அவர்கள் கடும் கண்டனத்தை தெரிவித்து, தக்க பதிலடி கொடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். மேலும், இந்தியா இராணுவத்திற்கு முழு சுதந்திரத்தையும் கொடுப்பதாக அறிவித்துள்ளார்.

இந்நிலையில், இந்திய-பாகிஸ்தான் எல்லை அருகே பொக்காரனில் இந்திய இராணுவம் போர் ஒத்திகையில் ஈடுபட்டுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் பொக்ரானில் விமானப் படை சார்பில் பிரமாண்ட ஒத்திகை நடத்தப்பட்டது. இந்த ஒத்திகையில் அனைத்து விதமான போர் 137 விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் பயிற்சியில் ஈடுபட்டன. அனைத்து விமானங்களும் துல்லியமான தகுதி நடத்தினர்.

இந்த போர் ஒத்திகை இரவு பகலாக நடைபெற்றது. மேலும், தரையில் இருந்து வானில் செல்லும் இலக்குகளை தாக்கி அழிக்கும் ஏவுகணை சோதனை, வானில் பறந்தபடியே வானில் உள்ள இலக்கை தாக்கும் சோதனை உள்ளிட்டவைகளை நடைபெற்றது.

இந்த போர் ஒத்திகையை இந்திய ராணுவத் தளபதி பிபின் ராவத் மற்றும் ராணுவ உயர் அதிகாரிகள், இந்திய கிரிக்கட் வீரர் சச்சின் டெண்டுல்கர் உள்ளிட்டோர் பார்வையிட்டனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

indian war rehearsal


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->