காற்று மாசுபாடு: டெல்லியில் சுவாச கோளாறுகளால் பாதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு.! - Seithipunal
Seithipunal


தலைநகர் டெல்லி மற்றும் அதனை சுற்றியுள்ள என்.சி.ஆர் பகுதிகளில் காற்று மாசுபாடு தொடர்ந்து மோசமடைந்து வருகிறது. இந்நிலையில் நேற்று டெல்லியின் ஒட்டுமொத்த காற்று தர குறியீடு 431 ஆக உள்ளது என மத்திய புவி அறிவியல் அமைச்சகம் தெரிவித்தது.

இதேபோன்று உத்தர பிரதேசத்திற்கு உட்பட்ட நொய்டா நகரில் காற்று தர குறியீடு 529 ஆக பதிவாகி உள்ளது. இதனால் டெல்லி, அரியானா உள்ளிட்ட வடமாநிலங்களில் காற்று தர குறியீடு கடுமையாக மோசமடைந்து உள்ளது. 

இந்நிலையில் டெல்லியில் காற்று மாசுபாட்டினால் லேடி ஹார்டிங்கே மருத்துவமனை மற்றும் கலாவதி மருத்துவமனை ஆகியவற்றில் சுவாச கோளாறுகளால் அனுமதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை 40 முதல் 50 சதவீதம் அதிகரித்துள்ளது.

இதுகுறித்து லேடி ஹார்டிங்கே மருத்துவமனையின் மருத்துவர் ஷாரதா தெரிவித்ததாவது, சரியான புள்ளிவிவர தகவல் இல்லை. ஆனால், அவசரகால நிலை ஏற்பட்டு உள்ளது. காற்று மாசுபாட்டால் நுரையீரல் தமனிகளின் பாதிப்பு நோயாளிகளிடையே அதிகரித்து உள்ளது. 

இதனால், அந்த அறிகுறிகளுடன் சேர கூடிய நோயாளிகளின் எண்ணிக்கை 40 முதல் 50 சதவீதம் அதிகரித்து காணப்படுகிறது. இந்த பாதிப்பு உள்ளவர்களுக்கு முன்பே வேறு சில சுவாச கோளாறுகளும் உள்ளன. நோயெதிர்ப்பு ஆற்றல் குறைவாக உள்ளவர்கள் எளிதில் பாதிக்கப்படுகின்றனர்.

மேலும் அவர்களுக்கு வேறு சுவாச பாதிப்புகளான இருமல், மார்பு வலி மற்றும் சுவாசிப்பதில் அதிக சிரமம் காணப்படுகிறது என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

increased the number of people suffering from respiratory diseases due to air pollution in delhi


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->