நண்பனின் மனைவியை வலுக்கட்டாயமாக கள்ளக்காதலில் ஈடுபடுத்த முயற்சி.! ஆலோசனையில் அறிவு வராததால் எடுக்கப்பட்ட விபரீத முடிவு.!!  - Seithipunal
Seithipunal


கர்நாடக மாநிலத்தில் உள்ள ஹாசன் மாவட்டத்தில் இருக்கும் ஒலேநரசிப்புரா தாலுகா கோபனஹள்ளியை சார்ந்தவர் மோகன் (வயது 29). இவருடைய மனைவியின் பெயர் ரம்யா (வயது 25). இவர்கள் இருவரும் அங்குள்ள பெங்களூர் நகர் பகுதியில் வசித்து வருகின்றனர். 

அதே பகுதியை சார்ந்த மது என்பவர் பெங்களூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இவர்களுக்குள் ஏற்பட்ட நட்பு ரீதியிலான பழக்கத்தை அடுத்து., மது அடிக்கடி மோகனின் இல்லத்திற்கு சென்று வருவதை வழக்கமாக வைத்துள்ளார். 

இந்த சூழ்நிலையில்., கடந்த 13 ம் தேதியன்று மது கொடூர முறையில் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். இந்த தகவலை பொதுமக்கள் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கவே., தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். 

இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் இது குறித்து விசாரணை மேற்கொள்ள துவங்கினர்., அந்த விசாரணையில்., மோகனின் இல்லத்திற்கு மது அடிக்கடி சென்று வந்த விஷயம் தெரியவந்தது. இதனையடுத்து கணவன் மற்றும் மனைவியிடையே காவல் துறையினர் மேற்கொண்ட விசாரணையில் மதுவை கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்தனர். 

அவர்கள் தெரிவித்த வாக்குமூலத்தில்., நட்பு ரீதியிலான பழக்கத்தில் அடிக்கடி மோகனின் இல்லத்திற்கு வருகை தந்த நிலையில்., மோகனின் மனைவி மீது ஈர்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த ஈர்ப்பை அடுத்து கள்ளத்தொடர்பில் ஈடுபடக்கூறி ரம்யாவை கட்டாயப்படுத்தி வந்துள்ளார். இதனை ஏற்க மறுத்த அவர் அவரது செயல்பாடுகள் குறித்து கணவரிடம் கூறியுள்ளார். 

இதனையடுத்து கணவன் மற்றும் மனைவி இருவரும் சேர்த்து மோகனை அழைத்து ஆலோசனை கூறியுள்ள நிலையில்., தனது நிலைப்பாட்டில் இருந்து மாறாமல் மது எப்படியாவது ரம்யாவை கள்ளத்தொடர்பில் ஈடுபடுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்துள்ளார். இதற்கு பின்னர் இருவரும் சேர்ந்து மதுவை கொலை செய்தது தெரியவந்துள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in Bangalore husband and wife killed men when illegal affair introduce after counseling


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->