#BREAKING காஷ்மீர் தாக்குதல் எதிரொலி.! அனைத்து மாநிலங்களுக்கும் அவசர எச்சரிக்கை.!! வேட்டை ஆரம்பம்.!! - Seithipunal
Seithipunal


காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் மீது ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி நடத்திய கொடூர தாக்குதலில் 41 வீரர்கள் வீரமரணம் அடிந்தனர். இந்த தாக்குதலுக்கு பிரதமர் நரேந்திர மோடி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், உலகம் முழுவதிலும் இருந்து பல்வேறு தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

பாகிஸ்தான் தூதரை வரவழைத்து இந்திய உள்துறை அமைச்சகம் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும், மிகவும் முக்கியத்துவமான நாடு என வர்த்தகத்துக்கான முன்னுரிமையுடன் பாகிஸ்தானுக்கு அளிக்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை இந்தியா ரத்து செய்துள்ளது.

இதற்கிடையே, புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுப்பது பற்றி ராணுவ வீரர்கள் முடிவு செய்வார்கள் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார், மேலும், இந்திய பிரிவினைக்கு பிறகு ஒரு நாடு பயங்கரவாதிகளுக்கு புகலிடம் அளித்து வருகிறது, திவாலாகி கொண்டு இருக்கும் அந்த நாடு இன்று பயங்கரவாதத்தின் சின்னமாக உள்ளது.

காஷ்மீர் மாநிலம் புல்வாமா தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளுக்கு முடிவு கட்டுவது குறித்து ராணுவம் முடிவு செய்யும், பதிலடி கொடுப்பது குறித்து நமது வீரர்கள் முடிவு செய்வார்கள், அவர்களுக்கு முழு சுதந்திரம் கொடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்து உள்ளார்.

இந்நிலையில், காஷ்மீரில் வன்முறை பரவாமல் தடுக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் மற்றும் பாதுகாப்புகள் குறித்து உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நடைபெற்ற உயர்மட்ட குழுவில் ஆலோசனை நடத்தப்பட்டது.

ஆலோசனைக்கு பின் உள்துறை அமைச்சகம் வெளியிட்டு அறிவிப்பில், 

* அனைத்து மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.

* புல்வாமா தாக்குதலை தொடர்ந்து ஜம்மு காஷ்மீர் மாணவர்கள், மக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.

* காஷ்மீர் பள்ளத்தாக்கில் உள்ள தீவிரவாத அமைப்புகளை வேட்டையாட, தேவையான சாத்தியமான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி கூட்டத்தில் அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

HOME MINISTRY URGENT ANNOUNCEMRNT FOR ALL INDIAN STATE


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->