காங்கிரசுக்கு பேரிடி.‌. பாஜக வசமாகும் இந்தூர்.. வேட்பாளர் எடுத்த விபரீத முடிவு.!! - Seithipunal
Seithipunal


குஜராத் மாநிலம் சூரத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளரின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து சுயேட்சையாக போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்த அனைவரும் தங்கள் வேட்பு மனுக்களை வாபஸ் பெற்றதால் பாஜக சார்பில் போட்டியின்றி வேட்பாளர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.‌

இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. காங்கிரஸ் கட்சி இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த நிலையில் அதே பாணியில் மேலும் ஒரு சம்பவம் தற்போது மத்திய பிரதேசம் மாநிலம் சூரத் நகரில் அரங்கேறியுள்ளது. 

மத்திய பிரதேசம் மாநிலம் இந்து தொகுதியில் காங்கிரஸ் சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு வேட்பு மனு தாக்கல் செய்த அக்ஷய் பாம் கடைசி நாளான இன்று தனது வேட்பு மனுவை வாபஸ் பெற்றதோடு தன்னை பாஜகவில் இணைத்துக் கொண்டுள்ளார். சூரத்தில் காங்கிரஸ் கட்சி வேட்பாளரின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டது போன்று இங்கு காங்கிரஸ் வேட்பாளரை தனது வேட்பு மனுவை வாபஸ் பெற்ற பாஜகவில் இணைந்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Indore Congress candidate withdraw nomination and joined in BJP


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->