மும்பை ரெட்சிட்டியின் யாரும் அறிந்திடாத வரலாறு!! அழிந்து வரும் அடையாளம்!!  - Seithipunal
Seithipunal


மும்பையில் உள்ள காமாத்திபுரம் என்ற பகுதி தான் ‘சிவப்பு விளக்குப் பகுதி’ என்று அழைக்கப்படுகிறது. ரெட்ஸிட்டி என அனைவராலும் அடையாளப்படுத்தப்படும் இந்த இடத்தின் வரலாறை தெரிந்து கொள்வோம்.

பிரிட்டிஷ்காரர்கள் ஆண்ட காலத்தில் ஆந்திராவில் இருந்து காமத்தி என அழைக்கப்படும் சமூகத்தை சேர்ந்த பெண்கள் இங்கு மும்பையின் சாலை கட்டுமான பணிகளுக்காக தங்கவைக்கப்பட்டனர்.

பின்னர் பிரிட்டிஷ்காரர்கள் அந்த பெண்களை தங்களின் ஆசைக்கு பயன்படுத்தி கொண்டுள்ளனர். இது நீண்ட வருடங்களாக தொடரவே இந்த இடத்திற்கு காமத்திபுரம் என்ற பெயரும், ரெட்ஸிட்டி என்ற அடைமொழியும் ஏற்பட்டுள்ளது.

பாலியல் தொழிலுக்கு பெயர்பெற்ற இந்த பகுதி தற்பொழுது அனைவரும் எதிர்பாராத விதமாக மிகப்பெரும் மாற்றத்திற்கு உள்ளாகி கொண்டிருக்கிறது. 

ஒருபுறம் எய்ட்ஸ் பயம் இந்த தொழிலிற்கு அச்சத்தை ஏற்படுத்துவது போல, வேறொரு சம்பவமும் இந்த தொழிலிற்கு பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. 25 ஆண்டுகளுக்கு முன்பு வரை இங்கு 50000 மேற்பட்ட பாலியல் தொழிலாளர்கள் இருந்துள்ளனர்.

அனால், தற்பொழுது வெறும் 1,500 தொழிலாளர்கள் மட்டுமே இங்கு உள்ளனர். பாலியல் தொழிலே அழிக்கப்பட்டு வருகிறதா என்றால் இல்லை. அது இந்த இடத்தை விட்டு வெளியேறி பரவி வருகிறது என்றே பதிலளிக்க முடியும்.

இந்த ஏரியாக்களில் ரியல் எஸ்டேட் பிசினஸ் தற்பொழுது உயர்ந்து வருகிறது. இதன் காரணமாக இந்த வட்டாரம் முழுதும் பணக்காரர்களுக்கான இடமாக மாறி வருகிறது.

வசதியானவர்கள் மட்டுமே நுழைய கூடிய இடமாக மும்பையின் இந்த பகுதி மாறிவருவதே காமத்திபுறத்தின் இந்த நிலைக்கு காரணம். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

history of red city in mumbai


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->