எம்.எல்.ஏக்களுக்கு 67 சதவீதம் சம்பள உயர்வு வழங்க ஜனாதிபதி ஒப்புதல்.! - Seithipunal
Seithipunal


நாட்டின் தலைநகரான டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், டெல்லி மாநிலத்தில் உள்ள எம்.எல்.ஏ.க்களுக்கு சம்பள உயர்வு கோரி குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்பட்ட முன்மொழிவிற்கு தற்போது ஒப்புதல் கிடைத்துள்ளது. 

இதுவரைக்கும் டெல்லி மாநிலத்தில் உள்ள எம்.எல்.ஏக்கள் மாத சம்பளமாக ரூ.54 ஆயிரம் பெற்று வந்தார்கள். இனி இந்த ஒப்புதல் மூலம் அங்குள்ள எம்.எல்.ஏ.க்கள் 67சதவீதம் சம்பள உயர்வுடன் ரூ.90 ஆயிரம் பெற உள்ளனர். 

சம்பள உயர்வு மாட்டு மல்லாமல் தொகுதி உதவித்தொகை, டெலிபோன் படி, பயணப்படி, செயலக பணப்பலன் என்று அனைத்தும் உயர்த்தப்பட்டுள்ளன. இந்த ஒப்புதல் மூலம் அமைச்சர்கள், சபாநாயகர், எதிர்க்கட்சி தலைவர் உள்ளிட்டவர்களுக்கும் அதிகபட்சமாக ரூ.72 ஆயிரத்தில் இருந்து ரூ.1.7 லட்சம் வரை ஊதிய உயர்வு கிடைக்கப் போகிறது. 

மாநிலத்தில், கடந்த ஆண்டு ஜூலை மாதம் நடைபெற்ற சட்டசபை கூட்டத்தில் சம்பள உயர்விற்கான மசோதா நிறைவேற்றப்பட்டு குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. தற்போது அந்த மசோதாவிற்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதல் கிடைத்திருப்பதாக சட்டமன்ற விவகாரத்துறை தெரிவித்துள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

delhi MLAs slary raised sixty seven percentage


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->