#புதுச்சேரி || சுற்றுச் சுவர் இடிந்த விபத்தில் பலி எண்ணிக்கை 5 ஆக உயர்வு.!! - Seithipunal
Seithipunal


புதுச்சேரியில் வாய்க்கால் கட்டும் பணியின் போது சுற்றுச்சூழல் இடிந்த விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது. புதுச்சேரி மாநிலம் வசந்தம் நகர் பகுதியில் இன்று காலை வாய்க்கால் கட்டுமான பணியில் 16 தொழிலாளர்கள் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். 

அப்போது மின்துறைக்கு சொந்தமான 33 ஆண்டு பழமையான சுற்றுச்சூழல் திடீரென சரிந்து விழுந்தது. அப்போது வாய்க்கால் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கினர். 

இந்த துயர சம்பவத்தில் தமிழகத்தைச் சேர்ந்த 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் படுகாயங்களுடன் மீட்கப்பட்ட 3 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த மூன்று பேரில் ராஜேஷ் கண்ணா மற்றும் கமல் ஆகிய இருவர் தற்போது உயிரிழந்துள்ளனர். 

இதனால் பலி எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது. ஆம்புலன்ஸ் உரிய நேரத்தில் வராததால் கட்டுமான பணியில் உபயோகப்படுத்தப்பட்ட மினி லாரியில் வைத்து தொழிலாளர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்வது தெரியவந்துள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Death toll increased 5 in Puducherry incident


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->