ஜெகன்மோகன் ரெட்டி பாஜகயுடன் மறைமுக கூட்டணி வைத்துள்ளார் - ஒய்.எஸ். ஷர்மிளா தாக்கு!! - Seithipunal
Seithipunal


ஆந்திராவில் மக்களவைத் தேர்தலும் சட்டப்பேரவை தேர்தலும் ஒன்றாக நடைபெற உள்ளது. ஆந்திராவில் உள்ள 25 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும் 125 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் மே -13ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது.

மக்களவைத் தேர்தல் மற்றும் சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு ஆந்திராவில் தேர்தல் பிரச்சாரம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. அனைத்து கட்சி தலைவர்களும் அனைத்து கட்சி வேட்பாளர்களும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவரும் முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டியின் சகோதரியுமான ஒய்.எஸ். ஷர்மிளா காக்கிநாடா பகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

பிரச்சாரத்தில் மக்களிடையே வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட ஒய்.எஸ்.சர்மிளா பேசுகையில், கடந்த 10 ஆண்டுகளாக ஆந்திர மாநிலம் ஒரு அடி கூட முன்னேறவில்லை. இதற்கு காரணம் ஜெகன்மோகன் ரெட்டியும் சந்திரபாபு நாயுடு தான். காங்கிரஸ் கட்சியால் மட்டுமே ஆந்திராவை வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்ல முடியும்.

சந்திரபாபு நாயுடும் ஜெகன்மோகன் ரெட்டியும் பாஜகவுடன் கைகோர்த்துள்ளனர். ஒருவர் கூட்டணி வைத்து மற்றொருவர் மறைமுகமாக கூட்டணி வைத்து பாஜகவின் கைக்கூலிகளாக செயல்படுகிறார்கள் என்று பேசினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Jaganmohan reddy silence bjp alliance


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->