இமாசலில் தொடர் கனமழை, வெள்ளம்- மாண்டியில் அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை!! - Seithipunal
Seithipunal


இமாசல பிரதேசத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனை அடுத்த 48 மணி நேரத்திற்கு 7 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் 3 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்படும் என்று ஏற்கனவே எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இமாசல பிரதேசத்தில் பெய்து வரும் கனமழையால் இன்று காலை வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டது.

இதனால் லஹால் மற்றும் ஸ்பிடி நகர் முழுவதும் கடுமையாக பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. மேலும் பல்வேறு கிராமங்களுக்கு இடையே போக்குவரத்து முற்றிலும் தடைபட்டுள்ளது. ஸ்பிடியில் இருந்து மணாலி நோக்கிச் சென்ற கல்லூரி மாணவர்கள் 30 பேர் நடுவழியில் சிக்கி கொண்டார்கள்.

சில மணி நேரங்கள் கழித்து அவர்கள் மீட்கப்பட்டனர். இந்த தொடர் கனமழை காரணமாக மாண்டி மாவட்டத்தின் ரியாஸ் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மாண்டியில் உள்ள அனைத்து அரசு, தனியார் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Continuous heavy rains floods in Imazal All schools and colleges in Mandi have a holiday tomorrow


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->