தீயாய் பரவும் பறவைக் காய்ச்சல் - ராஞ்சியில் 8 பேர் தனிமைப்படுத்தி சிகிச்சை.! - Seithipunal
Seithipunal


ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் பறவைக் காய்ச்சல் பரவியதை அடுத்து, ஹோட்வாரில் உள்ள பிராந்திய கோழிப் பண்ணையின் இரண்டு மருத்துவர்கள் மற்றும் ஆறு ஊழியர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களுக்கு பறவைக் காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, கால்நடை பராமரிப்பு அமைச்சகத்தின் கீழ், அனைத்துப் பறவைகளின் விற்பனை மற்றும் கொள்முதல் மீது கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ராஞ்சி துணை கமிஷனர் ராகுல் குமார் சின்ஹா தெரிவித்ததாவது, “ராஞ்சியில் பறவை காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது. பறவை காய்ச்சல் உறுதி செய்யப்பட்டவுடன், கால்நடை பராமரிப்பு அமைச்சகம் குறிப்பிட்டுள்ள வழிகாட்டுதல்களின் கீழ் தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. 

முதல் நடவடிக்கையாக கோழி இறைச்சி விற்பனைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஹோட்வாரில் ஒரு கிலோமீட்டர் சுற்றளவில் அனைத்து பறவைகளின் விற்பனை மற்றும் கொள்முதல் செய்ய தடை செய்யப்பட்டுள்ளது என்றுத் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

eight peoples affected birds fever in jarkhant ranji


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->