ஆட்டம் போட்ட ED இப்போ அலறுது! அதிகாரிகளை ரவுண்ட் கட்டும் CBI! பரபரப்பில் டெல்லி.!! - Seithipunal
Seithipunal


டெல்லி அரசின் புதிய மதுபான கொள்கை ஊழல் வழக்கில் 5 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதாக அமலாக்கத்துறை உதவி இயக்குனர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

டெல்லியில் கடந்த 2021 ஆம் ஆண்டு ஆம் ஆத்மி அரசு கொண்டு வந்த புதிய மதுபான கொள்கையின் காரணமாக அரசுக்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக புகார் எழுந்தது. இதனை தொடர்ந்து டெல்லி அரசின் புதிய மதுபான கொள்கை தொடர்பாக அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ தனித்தனியே வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டது.

இந்த வழக்கில் முக்கிய திருப்பமாக கடந்த பிப்ரவரி மாதம் டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா கைது செய்யப்பட்ட சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் இந்த வழக்கில் பல முக்கிய தொழிலதிபர்கள் சம்பந்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. இந்த நிலையில் டெல்லியைச் சேர்ந்த தொழிலதிபர் அமன் தால் சிங் கடந்த மார்ச் மாதம் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார்.

இந்த நிலையில் அவர் கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்க அமலாக்கத்துறை உதவி இயக்குனர் உட்பட சில அதிகாரிகள் மறைமுகமாக செயல்பட்டது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து கடந்த ஜூலை மாதம் அமலாக்கத்துறை உதவி இயக்குனர் பவண் காத்ரி வீட்டில் அமலாக்கத் துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் சுமார் 2 கோடி ரூபாய்க்கும் அதிகமான பணம் பறிமுதல் செய்யப்பட்டது. 

இதனைத் தொடர்ந்து இந்த வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டு விசாரணை தொடங்கப்பட்டது. சிபிஐ விசாரணையில் கைது செய்யப்பட்ட தொழிலதிபரின் அமன் தாலின் தந்தை பிரேந்தர் பால் சிங், அமலாக்கத்துறை அதிகாரி நித்தேஷ் கோஹர், விக்ரம் ஆதித்யா, தீபக் சங்வான், பட்டைய கணக்காளர் பிரவீன் குமார் ஆகியோர் இடைத்தரகர்களாக செயல்பட்டது தெரியவந்தது.

இவர்கள் மூலம் கடந்த ஆண்டு டிசம்பரில் அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கு தொழிலதிபருடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து மதுபான வழக்கிலிருந்து அமலாக்கத்துறையின் கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்க அமன் திலிடமிருந்து 5 கோடி ரூபாய் பணம் பெற்றுக்கொண்ட பிரவீன் குமார் அந்த பணத்தை அமலாக்கத்துறை அதிகாரி பவண் காத்ரிக்கு கைமாற்றியதாக கூறப்படுகிறது.

இதற்கிடையே அமன் தால் கடந்த மார்ச் மாதம் அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டதால் சிக்கல் ஏற்பட்டது. இதனால் கைமாறிய பணத்தில் ஒரு கோடி ரூபாய் மீண்டும் தொழிலதிபரின் தந்தையிடம் திருப்பிக் கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து இடைத்தரகரங்களாக செயல்பட்ட பிரவீன் குமார், விக்ரமாதித்யா சிங், தீபக் சங்வான் ஆகியோருக்கு தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் 2.19 கோடி ரூபாய் பணம் மற்றும் மதுபான கொள்கை தொடர்பான ஆவணங்களை கைப்பற்றினர்.

இதனைத் தொடர்ந்து அமலாக்கத்துறை உதவி இயக்குனர் பவண் காத்ரி உட்பட 7 பேரை சிபிஐ கைது செய்து விசாரணை நடத்தி வருகிறது. டெல்லி அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை கிளப்பிய இந்த வழக்கில் சிபிஐ அதிகாரிகளால் அமலாக்கத்துறை அதிகாரிகளே கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

CBI arrests ED officers in delhi liquor policy case


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->