இனி மாமன் மகளை திருமணம் செய்ய முடியாது? போராட்டத்தில் குதித்த மக்கள்! - Seithipunal
Seithipunal


ஜார்க்கண்ட் மாநில  முதல்வர் புஷ்கர் சிங் முதல்வராகப் பொறுப்பேற்ற போது மாநிலத்தில் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும் என்று உறுதி அளித்தார். இரண்டு  ஆண்டுகளுக்கு முன்பூ  ஜார்க்கண்ட் மாநிலத்தில் நடைபெற்ற முதல் அமைச்சரவைக் கூட்டத்தில், பொது சிவில் சட்டம்  அமல்படுத்த தீர்மானிக்கப்பட்டது. 

மசோதாவை தயாரிக்க உச்சநீதிமன்ற ஓய்வு பெற்ற முன்னாள் நீதிபதி ரஞ்சனா பிரகாஷ் தேசாய் தலைமையிலான 5 பேர் கொண்டு குழு ஒன்று அமைக்கப்பட்டது.

பல்வேறு கட்ட ஆய்வுப் பங்கம் பின் வரைவு மசோதாவை தயார் செய்து முதல்வரிடம் அறிக்கையாகத் தாக்கல் செய்தனர். இந்த மசோதாவுக்கு மாநில அமைச்சரவை கடந்த 4 ஆம் தேதி ஒப்புதல் வழங்கியது.

இதற்கு கடும் எதிர்ப்பு ஏற்பட்ட நிலையில்,  பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. உத்தரகாண்ட் சட்டசபை வளாகப் பகுதியில் 144 தடை உத்தரவு மசோதா மீதான விவாதம்  உத்தரகாண்ட் சட்டசபையில் விவாதம் நடைபெற்று வந்தது.

கடும் எதிர்ப்பையும் மீறி  (07-02-24) உத்தரகாண்டில் நாட்டின் முதன் மாநிலமாக பொது சிவில் சட்டம் நேற்று நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்த சட்டத்தில்,  பலதார திருமணத்துக்கு உத்தரகாண்ட் மாநிலத்தில் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், மறுமணம், விவாகரத்து குறித்து பொது விதிகளை அமல்படுத்தியுள்ளது. திருமணங்களை போன்று, லிவ்-இன் உறவுமுறையில்  இருக்க விரும்புவோர், மாநில அரசிடம் கட்டாயம் பதிவு செய்து கொள்ள வேண்டும். பதிவு செய்ய தவறினால் அவர்கள் மீது  சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும், திருமணம் செய்யத் தடை விதிக்கப்பட்டுள்ள உறவுகள் என்ற பிரிவில், தந்தை சகோதரியின் மகன்/மகள் ( அத்தை மகன்/மகள்) மற்றும் தாய் சகோதரரின் மகன்/மகள் (தாய்மாமன் மகன்/மகள்) என்ற உறவுமுறையும் இடம்பெற்றுள்ளது. 

அதன் படி, அத்தை மாமா முறையில் திருமணம் செய்வதையே தடை செய்வதாக உள்ளது இந்த மசோதா.  


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Can't marry uncle's daughter anymore? People jumped into the struggle!


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->