அதிர்ச்சி சம்பவம்: மனைவி, மகனை ஆற்றில் தள்ளி கொன்றுவிட்டு தொழிலதிபர் தற்கொலை..! - Seithipunal
Seithipunal


கடன் பிரச்சனையால் மனைவி, மகனை ஆற்றில் தள்ளிக் கொன்றுவிட்டு தொழிலதிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார் 

கர்நாடக மாநிலம் சிட்டகுலா காவல் எல்லைக்குட்பட்ட கோபஷிட்டா பகுதியை சேர்ந்தவர் தொழிலதிபர் ஷியாம் பட்டீல்(40). இவரது மனைவி ஜோதி பட்டீல்(35). இவர்களது மகன் தக்ஷன் பட்டீல் (12). இவர்கள் கோவாவில் வசித்து வந்தனர். இந்நிலையில், ஷியாம் பட்டீலுக்கு தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் பலரிடம் கடன் வாங்கியுள்ளார். இதையடுத்து கடன் கொடுத்தவர்கள் பணத்தை திருப்பி கேட்டு நெருக்கடி கொடுத்து வந்துள்ளனர். 

இந்நிலையில் வாங்கிய கடனை திருப்பி கொடுக்க முடியாததால் மன வேதனை அடைந்த ஷியாம் பட்டீல், மனைவி மற்றும் மகனுடன் சொந்த ஊருக்கு வந்தார். இதையடுத்து அவர்களை காளி ஆற்றங்கரைக்கு அழைத்துச் சென்ற ஷியாம் பட்டீல், மகன் மற்றும் மனைவியை ஆற்றுக்குள் தள்ளிவிட்டுள்ளார். இதில் இருவரும் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

இதையடுத்து கோவாவுக்கு சென்ற ஷியாம் பட்டீல், வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்நிலையில் பெண் மற்றும் சிறுவனின் உடல் ஆற்றில் மிதப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் இரண்டு பேரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுகுறித்து விசாரணை நடத்தியதில், ஆற்றில் பிணமாக மீட்கப்பட்டவர்கள் தொழிலதிபர் ஷியாம் பட்டீலின் மனைவி மற்றும் மகன் என்பது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து மேலும் விசாரணையில், மனைவி மற்றும் மகனை ஆற்றில் தள்ளி கொன்று விட்டு தொழிலதிபர் ஷியாம் பட்டீல் வீட்டில் தற்கொலை செய்து கொண்டதும் விசாரணையில் தெரியவந்தது. இந்த சம்பவம் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Businessman commits suicide after killing his wife and son in the river


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->