அசாம் || புயல், கனமழை காரணமாக 12 ஆயிரம் வீடுகள் சேதம்., 30 ஆயிரம் மக்கள் தவிப்பு.! - Seithipunal
Seithipunal


அசாம் மாநிலத்தில் பல்வேறு மாவட்டங்களில் கடுமையான புயலுடன் கூடிய கனமழையால் 592 கிராமங்களில் சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள்  பாதிக்கப்பட்டுள்ளனர். இதில்,14 பேர் உயிரிழந்துள்ளனர்.

இது குறித்து அம்மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவிக்கையில்,

"கடந்த 15-ம் தேதி புயலுடன் கூடிய கன மழையால் திப்ருகார், பர்பேட்டா, கோல்பரா போன்ற மாவட்டங்களில் 8பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், கிராங், தர்ராங், கச்சார், கோலாகாட், கர்பி அங்லாங், உடல்குரி, கம்ரூப் ஆகிய மாவட்டங்களில் உள்ள கிராமங்களில் ஏராளமானோர் புயலால் பாதிக்கப்பட்டுள்ளன.

திப்ருகர் மாவட்டத்தில், திங்காங் பகுதியில் மூங்கில் மரங்கள் வேரோட சாய்ந்துள்ளது.இதில், சிறுமி உள்பட 4 பேர் உயிரிழந்துளள்னர். இதனை தொடர்ந்து கோல்பரா மாவட்டத்தில் 15 வயது சிறுவன்  மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளார்.

சுமார் 6,464 வீடுகள் பெருமளவில் சேதமடைந்துள்ளன. 5826 வீடுகள் முற்றிலும் சேதமடைந்துள்ளன". என்று பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Assam Rain Fall April


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->