கஜாவால் அவதிப்படும் மக்களுக்காக 3ஆம் வகுப்பு சுட்டிசிறுமி செய்த நெகிழ்ச்சி செயல், குவியும் வாழ்த்துக்கள்.! - Seithipunal
Seithipunal


கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ மூன்றாம் வகுப்பு படிக்கும் சஞ்சனா என்ற சிறுமி தான் உண்டியலில் சேர்த்து வைத்திருந்த பணத்தை நிவாரண நிதியாக அளித்துள்ளது பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது .

தமிழகத்தில் கஜா புயலால் நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், கடலூர், புதுக்கோட்டை உட்பட பல மாவட்டங்களில் மரங்கள்,மின்கம்பங்கள் அடியோடு சாய்ந்து  பல வீடுகள் சேதமடைந்துள்ளது.

இந்நிலையில் உண்ண உணவின்றி, இருக்க இடமின்றி தவித்து வரும் மக்களுக்கு பல்வேறு தொண்டு நிறுவனங்கள், திரையுலக பிரபலங்கள் மற்றும் தன்னார்வலர்கள் பலரும் தாமே முன்வந்து உதவி செய்து வருகின்றனர்.

இந்நிலையில் சஞ்சனா என்ற மூன்றாம் வகுப்பு படிக்கும் சிறுமி தான் உண்டியலில் சேர்த்து வைத்திருந்த பணத்தை அப்படியே நிவாரணநிதியாக கொடுத்துள்ளார்.

                        

இது குறித்து அந்த சிறுமி கூறுகையில்  எனது வீட்டில்  தாத்தாவும்,எனது  அம்மாவும் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நம்மால் முடிந்த உதவிகளை செய்யலாம் என்று சொல்லிக்கொண்டு இருந்தாங்க.

நானும் என் உண்டியலில் கொஞ்சம் காசு சேமித்து வைச்சிருந்தேன். அதைக் கொண்டு வந்து நான் என் தாத்தாகிட்டக் கொடுத்து கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்யலாம்னு சொன்னேன். தாத்தா அந்த பணத்தை சரியான இடத்தில் சேர்த்து விட்டார் என மகிழ்ச்சியாக கூறியுள்ளார்.

மேலும் சஞ்சனாவின் உண்டியலில் 3550 ரூபாய் பணம் இருந்தது குறிப்பிடத்தக்கது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

3 standard student donate gaja relief fund


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->