ம.பி.,யில் 256 டைனோசர் முட்டைகள் கண்டுபிடிப்பு... ஆராய்ச்சியாளர்கள் அசத்தல்...!! - Seithipunal
Seithipunal


மத்திய பிரதேசம் மாநிலத்தை அடுத்த தார் மாவட்டத்தில் உள்ள பாக் மற்றும் குஷி பள்ளத்தாக்கில் டைனோசர்களின் 256 புதை வடிவ முட்டைகள் மற்றும் எலும்புக்கூடுகளை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். மத்திய பிரதேசம் மாநிலத்தில் நடைபெற்ற இந்த அகழாய்வில் டெல்லி பல்கலைக்கழகம், மோகன்பூர்-கொல்கத்தா மற்றும் கோபால் இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் ஆராய்ச்சியாளர்கள் நர்மதை நதி  பள்ளத்தாக்கில் ஆராய்ச்சி மேற்கொண்டனர்.

இந்த ஆய்வில் டைனோசர்களின் முட்டை மற்றும் எலும்புக்கூடுகள் கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலம் மத்திய பிரதேசம் மாநிலத்தில் டைனோசர்கள் வாழ்ந்தது உறுதியாகியுள்ளது. இந்த படிமங்களின் ஆயுட்காலம் சுமார் 6.60 கோடி ஆண்டுகளுக்கு முன்பாக நீண்ட கழுத்துடன் கூடிய டைனோசர்கள் வாழ்ந்ததாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் இது குறித்து பல்வேறு ஆராய்ச்சிகள் மேற்கொண்டு வருவதாகவும் பல தகவல்கள் கிடைக்க வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

256 dinosaur eggs found in madhya Pradesh


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->