கர்ப்பிணி பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் ஏற்படும் இரத்தம் உறைதல் பிரச்சனையை எதிர்கொள்வது மற்றும் கண்டறிவது எப்படி.!!  - Seithipunal
Seithipunal


பெண்கள் இல்லத்தில் திருமணம் முடிந்து கர்ப்பிணியாக இருக்கும் பொது அந்த பெண்ணை., அவரது கணவர் மட்டுமல்லாது கணவரின் குடும்பத்தார் மற்றும் பெண்ணின் குடும்பத்தார் தோலில் தூக்கி வைத்து சுமக்காத குறையாக அவரையும்., அவரது வயிற்றில் வளரும் குழந்தையையும் பாதுகாப்பார்கள். 

தாயின் கருவில் இருக்கும் குழந்தையானது சரியான வளர்ச்சியின்றி ஏழாவது மாதத்திலேயே மற்றும் எட்டாவது மாதத்தில் இறந்து போவது., நஞ்சு பிரிவது என்று பல பிரச்சனைகள் உள்ள நிலையில்., இந்த பிரச்சனைக்கு கர்ப்ப காலத்தில் இரத்தம் உறைதல் காரணமாக கூட இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. 

பொதுவாக நமக்கு உடலில் எதோ ஒரு இடத்தில் அடிபட்டு நமது உடலில் உள்ள இரத்தமானது அந்த காயத்தின் வழியே வருவது இயல்பு. சிறிதளவு இரத்தமானது வெளியேறிய பின்னர் அது குறைந்துவிடும். இந்த நிகழ்வானது இயல்பானது மற்றும் பாதுகாப்பானது. ஆனால்., எந்த விதமான காயமும் உடலில் ஏற்படாமல் இரத்தம் நமது உடலுக்கு உள்ளேயே உறையுமானால் அது ஆபத்தின் அறிகுறி என்று தான் கூற வேண்டும். 

பெண்கள் முதல் முறையாக கருத்தரிக்கும் சமயத்தில் சில சிக்கல்கள் அதில் ஏற்படுகிறது. அவர்களின் முதல் கருத்தரித்தல் மற்றும் குழந்தை பிரசவித்தல் நிகழ்ச்சிக்கு பின்னர்., அவர்களின் அடுத்த கருத்தரித்தலுக்கு பின்னர் மருத்துவரிடம் சென்று ஆலோசனை மேற்கொள்ளும் போது முதல் கருத்தரித்தல் குறித்து கேட்டால் மருத்துவருக்கே சில நேரத்தில் சந்தேகம் ஏற்படும். 

அந்த சமயத்தில் நம்முடன் குடும்ப உறுப்பினர் வந்திருக்கும் சமயத்தில் அவர்களிடத்தில் வினவினாள் குறித்த சொந்த உறவினருக்கு குறைப்பிரசவம்., உயர் இரத்த அழுத்தம் பற்றி நம்முடன் கூறுவார்கள். முதல் பிரசவத்தின் போது இரத்தம் உறையும் தன்மையானது ஏற்பட்டிருக்கும். இந்த நேரத்தில் முதல் பிரசவம் என்று தெரிந்தால் அவர்களுக்கு கவனத்துடன் சிகிச்சை அளிப்பது அவசியம். 

நாம் கருத்தரித்துள்ளோம் என்று உறுதியானதும் பிரசவத்திற்கு சுமார் இரண்டு நாட்களுக்கு முன்னதாக இரத்தம் உறைதலை தடுக்கும் மருந்துகளை உபயோக படுத்த வேண்டும். இந்த பிரச்சனை பெரும்பானோர்க்கு ஏற்படும்., பின்னர் மருத்துவரின் ஆலோசனையில் வரும் விளைவுகளை தடுப்பதற்கு முன் கூட்டியே ஊசியை செலுத்தி கொள்வது வழக்கம். அந்த வகையில் மருத்துவரின் ஆலோசனையை பெற்று கொள்வது நல்லது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

pregnant ladies how to avoid blood freezing


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->