பேட்ட படத்தில் தவறிய வாய்ப்பு , மீண்டும் ரஜினியுடன் இணையும் பிரபல காமெடி நடிகர்! உற்சாகத்தில் ரசிகர்கள்.! - Seithipunal
Seithipunal


பேட்ட படத்தை அடுத்து ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் உருவாகும் படத்தில் ரஜினி நடிக்கவுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் மார்ச் மாதம் தொடங்கி படம் தீபாவளிக்கு வெளியாகும் என தகவல் வெளிவந்துள்ளது.

இந்நிலையில் படப்பிடிப்பிற்காக முதல்கட்ட பணிகள் மிகவும்  தீவிரமாக நடைபெற்று வருகின்றன.மேலும் படக்குழுவினர்  இந்த படத்திற்கான நடிகர்கள் தேர்வை தொடங்கியுள்ளனர்.

அதனை தொடர்ந்து அப்படத்தில் முழுவதும் ரஜினியுடனே வலம் வரும் முக்கிய காமெடி கதாபாத்திரத்தில் நடிக்க யோகி பாபுவிடம் பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது. படப்பிடிப்பு எப்போது என முடிவானவுடன் அதில் கண்டிப்பாக நடிக்கிறேன் என்று யோகிபாபு கூறியுள்ளார். தற்போது யோகிபாபு ‘தளபதி 63’ படத்தில் நடித்து வருகிறார். 

மேலும் பேட்ட படத்திலேயே முனீஸ்காந்த் நடித்த கதாபாத்திரத்தில் நடிக்க முதலில் யோகிபாபுவிடம் கேட்கப்பட்டது. ஆனால் அவருக்கு தேதிகள் பிரச்சினையால் நடிக்கமுடியவில்லை.

இந்நிலையில் படக்குழு இந்த மாத இறுதிக்குள் அனைத்து நடிகர்கள் தேர்வையும் முடித்துவிட்டு, மார்ச் மாதத்தில் படப்பிடிப்பு துவங்க தயாராகி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

yogibabu join with rajini in next movie


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->