ரஞ்சித் - விக்ரம்.. 'தங்கலான்' படத்தின் முக்கிய அப்டேட்.. படக்குழு அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


மெட்ராஸ் மற்றும் அட்டகத்தி போன்ற திரைப்படங்களில் வாயிலாக ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்தவர் தான் இயக்குனர் பா.ரஞ்சித். பின்னர், ரஜினியை வைத்து கபாலி உள்ளிட்ட படங்களை இயக்கி தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர் என்ற பெயரை பெற்றார்.

கடைசியாக இயக்குனர் ரஞ்சித் நட்சத்திரம் நகர்கிறது என்ற திரைப்படத்தை இயக்கியிருந்தார். அதனைத் தொடர்ந்து தற்போது சியான் விக்ரம் நடிக்கும் 'தங்கலான்' என்ற படத்தை இயக்கி வருகிறார்.

இந்த படம் கே.ஜி.எப் படம் போல இருக்குமென்று ஏற்கெனவே பா.ரஞ்சித் குறிப்பிட்டு இருந்தார். காரணம் இதுவும் கோலார் தங்க சுரங்கத்தில் வசிக்கும் மக்களின் கதை என்று கூறப்படுகிறது. 

இந்த நிலையில் ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்து வரும் 'தங்கலான்' படத்தின் முக்கிய அப்டேட்டை விக்ரமின் பிறந்த நாளான ஏப்ரல் 17ம்  தேதி வெளியிட உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Vikram in thangalan movie update on April 17


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->