நடிகர் சரத்குமாரின் மகனா இது.?! ஆச்சரியப்படுத்திய புகைப்படம் வைரல்.! - Seithipunal
Seithipunal


தமிழ், தெலுங்கு உள்ளிட்ட திரையில் 80-களில் முக்கிய நடிகராக இருந்தவர் தான் நடிகை ராதிகா சரத்குமார். அதன் பின்னர், இவர் நிறைய குணசித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். வெள்ளித்திரை மட்டுமின்றி சின்னத்திரை சீரியல்கள் பலவற்றிலும் இவர் நடித்து வருகின்றார். 

இவரது நடிப்பில் ஒளிபரப்பான சித்தி சீரியல் மிகவும் புகழ்பெற்றது. அத்துடன் வாணி, ராணி, அண்ணாமலை, செல்வி உள்ளிட்ட சீரியல்களுக்கு இல்லத்தரசிகள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. 

நீண்ட இடைவெளிக்கு பின்னர் நடிகை ராதிகா சித்தி சீரியல் இரண்டாம் பாகத்தில் நடித்தார். அரசியலில் ஈடுபட்டதால் சிறிது நாட்கள் இந்த சீரியலுக்கு அவர் விலக்கு கொடுத்து இருந்தார். 

நடிகை ராதிகா மற்றும் சரத்குமாருக்கு ராகுல் என்ற மகன் இருக்கின்றார். மலேசியாவில் படித்து வந்த அவர் தற்போது தனது பட்டப் படிப்பை முடித்து பட்டம் பெற்றுள்ளார். 

இந்த புகைப்படத்தை ராதிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருந்த நிலையில் சரத்குமாரை விட ராகுல் உயரமாக இருப்பதை கண்டு, "இந்த அளவிற்கு வளர்ந்து விட்டாரா?" என்று ரசிகர்கள் ஆச்சரியப்பட்டு போயுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

rathika sarathkumar son ragul photo viral


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->