"காசேதான் கடவுளடா" திரைப்படம் வெளியாவதில் சிக்கல்..!! - Seithipunal
Seithipunal


நடிகர் யோகி பாபு நடித்த "காசேதான் கடவுளடா" திரைப்படத்தை தற்போது வெளியிட மாட்டோம் என தயாரிப்பின் நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் உத்தரவாதம் அளித்துள்ளது.

சென்னை திருவான்மியூரை சேர்ந்த ராம் பிரசாத் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் சென்னை டி.நகர் சேர்ந்த ராஜ்மோகன் என்பவர் தன்னை அணுகி நடிகர் யோகி பாபு மற்றும் மிர்ச்சி சிவா ஆகியோர் நடிக்கக்கூடிய காசேதான் கடவுளடா திரைப்படத்தை எடுப்பதற்காக ஒரு கோடியே 75 லட்சம் ரூபாய் கடன் பெற்றதாகவும் திரைப்படம் திரையுவதற்கு முன்பே இந்த கடன் தொகையை திருப்பி கொடுத்துவிடுவதாகவும் ஒப்பந்தம் போட்டுள்ளோம்.

இந்த ஒப்பந்தத்தை மீறி தற்பொழுது இந்த திரைப்படத்தை வெளியிட தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டுள்ளதால் தனக்கு நிதி இழப்பு ஏற்படும் என்பதால் தற்பொழுது இந்த திரைப்படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்று அந்த மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த வழக்கானது சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சரவணன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்பொழுது ராஜ்மோகன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஒப்பந்தத்தின்படி குறிப்பிட்ட தொகை திருப்பி கொடுக்கப்பட்டுள்ளது. 

மேலும் நீதி பணத்தை கொடுக்கும் வரை இந்த திரைப்படம் வெளியிடப்பட மாட்டாது என்று உத்தரவாதம் அளித்தார். இந்த உத்தரவாதத்தை பதிவு செய்து கொண்ட சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி இது தொடர்பாக ராம் பிரசாத் தரப்பு பதில் அளிக்கும்படி உத்தரவிட்டு அடுத்த விசாரணையை மார்ச் 2ம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளனர். இதனால் காசேதான் கடவுளடா திரைப்படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Problem in Kasetan Kodavada movie release


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->