தேவ் படம் பாருங்க, 2 பிஎம்டபுள்யூ சூப்பர் பைக் பரிசாக வெல்லுங்கள்!! படக்குழு அறிவுப்பு!! - Seithipunal
Seithipunal


தேவ் படம் பார்ப்பவர்களுக்கு 2 பிஎம்டபுள்யூ சூப்பர் பைக் பரிசாக கிடைக்கும் என்று படக்குழு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

புதுமுகம் அறிமுகமாகி உள்ள ரஜத் ரவிசங்கர் இயக்கத்தில் கார்த்தி, ரகுல் ப்ரீத் சிங் உள்ளிட்டோர் நடித்த தேவ் படம் காதலர் தினத்தன்று வெளியானது. இந்த படத்தில் கார்த்தி பி.எம்.டபுள்யூ. சூப்பர் பைக் ஓட்டியிருப்பதை அனைவரும் பார்த்திருப்போம்.

இந்நிலையில் அதே பிராண்ட் வெல்லும் வாய்ப்பு மக்களுக்கும் கிடைத்துள்ளது. இது குறித்து தேவ் படக்குழு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது,

உங்கள் குடும்பத்திலும், தேவ் போன்று வாழ்க்கையை நேசித்து வாழ்ந்து வருபவர்கள் யாராவது இருக்கிறார்களா?. அப்படி என்றால் அவர்களை உலகத்திற்கு காட்ட வேண்டிய நேரம் வந்துவிட்டது. தேவ் படக்குழு சார்பில் அவர்களுக்காக 2 பி.எம்.டபுள்யூ. சூப்பர் பைக்குகள் பரிசாக காத்திருக்கின்றன.

நீங்களோ அல்லது உங்கள் குடும்பத்தில் உள்ள நபரோ அல்லது நண்பர்களோ இந்த பி.எம்.டபுள்யூ. பைக்கை எதற்காக வெல்ல வேண்டும் என்று எங்களுக்கு எழுதி அனுப்புங்கள். மேலும் இந்த படத்தில் வரும் காட்சிகளை குறித்து கேட்கப்படும் கேள்விகளுக்கும் பதில் அனுப்புங்கள்.

1. வாழ்க்கையை பற்றிய தேவின் சித்தாந்தமும், அவருடைய தொழிலும் என்ன?

2. மேக்னா பணத்தின்‌ மீது அதிக பற்று உள்ள தொழில் அதிபரா?

3.மேக்னா ஏன் தேவ்வை பிரிந்தார்?

ஒவ்வொரு கேள்விகளுக்கும்100 வார்த்தைகளுக்கு  மிகாமலும் அல்லது உங்கள் பதிலை எங்களுக்கு வீடியோ காட்சிகள் மூலமாகவும் அனுப்பலாம். இந்த போட்டிக்கான கடைசி தேதி பிப்ரவரி 25ம் தேதி ஆகும்.

சரியான பதில் அனுப்புபவர்களில் இருந்து 2 பேரை தேவ் படக்குழு குலுக்கல் முறையில் தேர்வு செய்யும். பரிசு வழங்கும் நாள் குறித்த விபரங்கள் பிப்ரவரி 28ம் தேதி அறிவிக்கப்படும். அவ்வாறு தேர்வு செய்யப்படும் 2 பேருக்கு பி.எம்.டபுள்யூ. சூப்பர் பைக்கை கார்த்தி வழங்குவார்.

இந்த பதில்களை devbikecontest@gmail.com என்ற இமெயில் முகவரிக்கோ அல்லது +91 9600809382 என்ற எண்ணிற்கு வாட்சப்பில் பத்தில்அனுப்பலாம் என்று படக்குழுவினர் அறிவித்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dev team announces superbike contest


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->