திருமணம் செய்ததாக ஏமாற்றிய, பிரபல நடிகர் மீது நடிகை அதிதி மேனன் புகார்.! - Seithipunal
Seithipunal


டூரிங் டாக்கீஸ், சாகசம் ஆகிய படங்களில் நடித்தவர் அபி சரவணன். கடந்த 2016-ம் ஆண்டு இவரும், நடிகை அதிதி மேனனும் இணைந்து பட்டதாரி என்ற படத்தில் நடத்து இருந்தனர்.

இந்த படத்திற்கு பிறகு ரகசியத் திருமணம் செய்துகொண்டு வாழ்ந்து வந்ததாக தகவல்கள் பரவியது. இந்நிலையில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு அபி சரவணனை யாரோ சிலர் காரில் கடத்தி சென்றுள்ளனர். அதற்குப்பிறகு அபி சரவணனின் செல்போன் சுவிட்ச் ஆஃப் ஆனதை தொடர்ந்து அவரது தந்தை காவல் நிலையத்தில் தன் மகனை யாரே கடத்தி சென்று விட்டதாக புகார் அளித்துள்ளார்.

இந்நிலையில், நடிகை அதிதி மேனன் இன்று சென்னை கமிஷனர் அலுவலகத்திற்கு வந்து புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அதில் அவர் கூறியவை, நானும், அபி சரவணனும் ‘பட்டதாரி’ என்ற படத்தில் இணைந்து நடித்தோம். அதன் பிறகு எங்களுக்குள் நட்பு மட்டுமே உள்ளது. இதை பயன்படுத்திக்கொண்டு நடிகர் அபி சரவணன், நான் அவரை பதிவுத் திருமணம் செய்து கொண்டதாக போலியான ஆவணங்களை தயாரித்துள்ளார்.

அவரே ஆள் வைத்து கடத்தல் நாடகத்தை அரங்கேற்றி விட்டு தன்னை கடத்தியதாக கூறுவது கட்டுக்கதை எனவும் தன்னை ஏமாற்றிய நடிகர் அபி சரவணன் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் அளித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

actress adhithi menon police case for actor abi saravanan


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->