NewsFast Logo
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு பிரிந்து செயற்பட்டு வந்த ஓபிஎஸ் மற்றும் எடப்பாடி அணிகள் இணைந்ததை தொடர்ந்தது, அதிமுகவிலிருந்து சசிகலாவின் குடும்பம் முற்றாக ஒதுக்கிவைக்கப்படும் எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், ஓபிஎஸ்க்கு துணை முதல்வர் பதவியும் வழங்கப்பட்டது. இவையாவும் பாஜகவின் வழிகாட்டுதலின் படியே நடந்ததாக கூறப்பட்ட நிலையில் இன்று பிரதமரை சந்தித்தனர் ஓபிஎஸ் அணியினர். துணை முதல்வரான ஓபிஎஸ்.,அரசின் நலத்திட்டங்கள் தொடர்பாக பிரதமரை சந்திப்பார் என்று செய்திகள் வெளியான நிலையில் உட்கட்சி பூசலிலின் பின்னர் இரு அணிகளும் இணைந்தாலும் கூட தாங்கள் இன்னும் ஒதுக்கப்பட்டதாக உணர்வதாக பிரதமரிடம் கூறி உரிய வழி வகைகளைக் காண வேண்டும் என்று கூறவே ஓபிஎஸ் அணியினர் டெல்லி சென்றனர்.பன்னீர்செல்வம் அரசு செலவில் டெல்லி வந்திருக்கலாம் .ஆனால் இது அரசு முறை பயணம் அல்ல என்கிறார்கள் விவரமறிந்தவர்கள். பன்னீர்செல்வம் அரசியல் ரீதியான சில நெருக்கடிகளால், எடப்பாடி பழனிசாமியுடன் கை கோர்த்தார். அவருக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்பட்டதே தவிர, அரசு நிர்வாகத்தில் எந்த முக்கியத்துவமும் இல்லை. நேற்றைய அரசு ஊழியர்களுக்கான சலுகைகள் வரை ஜெயலலிதா பாணியில், ‘நான் உத்தரவிட்டேன்’ என்றுதான் எடப்பாடி பழனிசாமியின் அதிகார பூர்வ அறிக்கைகள் வருகின்றன. அதாவது, ஆட்சி ரீதியான முடிவுகளை முதல்வர் என்ற அடிப்படையில் துணை முதல்வரின் கலந்தாலோசனை கூட இல்லாமல் எடப்பாடி பழனிசாமியால் இயங்க முடிகிறது. ஆனால் கட்சி ரீதியாக இணை ஒருங்கிணைப்பாளரான இபிஎஸ் அனுமதி இல்லாமல், ஒரு கிளைச் செயலாளரைக்கூட ஒருங்கிணைப்பாளரான ஓபிஎஸ்-ஸால் நீக்க முடியாது.ஆக, அணிகள் இணைப்பு என்ற பெயரில் இபிஎஸ் விரித்த வலைக்குள் ஓபிஎஸ் சிக்கிக் கொண்டதாக அவரது ஆதரவாளர்கள் குமுறியபடியே இருக்கிறார்கள். இரட்டை இலை மீட்பில் கூட எங்களை கலந்து பேசாமல் அமைச்சர் ஜெயக்குமாரை வைத்து அவர் தனியாக செயல்படுகிறார். நாங்கள் தனியாக செயல்படுகிறோம். ஆக மொத்தத்தில் எங்கள் அணியைச் சேர்ந்தவர்கள் ஏன் இணைந்தோம் இப்படி டம்மியாக இருக்கத்தான் இணைந்தோமா என்று நினைக்கிறார்கல். எங்கள் அணியினருக்கு முக்கியமான அமைச்சக பொறுப்புகள் வேண்டும். கட்சியின் அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும். என்று மோடியிடம் பஞ்சாயத்து பேசத்தான் இந்த பயணம் என்கிறார்கள்.மேலும் இதுவரை வந்த எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் ஒப்புக்கு சப்பா போல பன்னீரையும் இணைத்து சில கூட்டங்களை நடத்தினார் எடப்பாடி. அதில்,அவரது சொந்த தொகுதியான சேலத்தில் கூட்டிய பிரமாண்ட கூட்டத்தில் தினகரனுக்கும் செந்தில்பாலாஜிக்கும் சவால் விட்டார். ஆனால், அவருடைய பேச்சைக் கேட்டு தினகரனும், செந்தில் பாலாஜியும் மிரண்டார்களோ இல்லையோ பன்னீர் கொஞ்சம் ஆடித்தான் போனார்.தற்போது ஊசலாடும் ஆட்சியை காப்பாற்றிக்கொள்ள நம் கையை பிடிக்கும் எடப்பாடி பழனிசாமி நாளை 'இரட்டை இலை'சின்னம் கிடைத்த உடன் நம்மையும் வெட்டி விட தயங்கமாட்டார். அதனால் எதற்கும் உஷாராக இருப்போம் என்று நவம்பர் -5 ஆம் தேதி தேனி மாவட்டத்தில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை தன் தலைமையில் கொண்டாட தீர்மானித்து அதற்கான இடமும் தேர்வு செய்து விட்டார் பன்னீர். தேனி மாவட்டம் போடி விலக்கு அருகே உள்ள போஜராஜ் மில்லுக்குச் சொந்தமான மைதானத்தை தேர்வு செய்து அதை சுத்தப்படும் பணியை மாவட்ட நிர்வாகத்தை முடுக்கி விட்டு செய்து கொண்டிருக்கிறார் பன்னீர்செல்வம்.இந்த கூட்டத்திற்கு பல லட்சம் பேரை திரட்ட முடிவு செய்துள்ள பன்னீர்செல்வம் 50,000 கீழ் மட்ட அரசு ஊழியர்களை அந்த விழாவில் அமர வைத்து விட ஆசைப்படுகிறார். மறுபுறம் நவம்பர் 5-ஆம் தேதி நடக்கும் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவுக்கு சிறப்பு விருந்தினராக பாரத பிரதமர் மோடியை அழைத்து எடப்பாடிக்கு ஷாக் கொடுப்பதுதான் திட்டம்.மோடியை அழைப்பதற்குத்தான் இந்த டெல்லி பயணம்! எது எப்படி என்றாலும் பன்னீர்செல்வத்துக்கும் எடப்பாடி பழனிசாமிக்குமான பனிப்போர் விரைவில் முடிவுக்கு வரும். அல்லது முடித்து வைக்கப்படும் என்றே தெரிகிறது.


Get Newsletter

NewsFast Logo