பொதுமக்களே உஷார்..!! கையால் தொட்டாலே மரணத்தை ஏற்படுத்தும் மாத்திரை: இதய இயக்கத்தை நிறுத்தி 4 மாதங்களில் 17 பேர் பலி..! - Seithipunal
Seithipunal

மாத்திரைகள், நோய்க்கிருமிகளிடம் இருந்து நம்மைக் காக்கும் போர்வீரர்கள். நோயுறும் காலங்களில் மட்டும் அல்ல. நோய் வராமல் தடுப்பதற்காகவும் ஊட்டச்சத்துகளுக்காகவும்கூட மாத்திரைகள் பயன்படுகின்றன. உணவுக்கு முன்பாக உண்ணவேண்டியவை, உணவுக்குப் பின்னர் உண்ணவேண்டியவை, உணவோடு சேர்த்து உண்ணவேண்டியவை என மாத்திரைகள் பலவகைகளில் உள்ளன. மாத்திரைகள் உயிரை காக்கும் அத்தியாவசியமான ஒன்றாக இருந்து தற்போது அனாவசியமான விளைவுகளை ஏற்படுத்தி வருகிறது. கையால் தொட்டாலே மரணத்தை ஏற்படுத்தும் கொடிய மாத்திரைகளிடம் இருந்து எச்சரிக்கையாக இருக்கும் படி, அமெரிக்கா கேட்டுக் கொண்டுள்ளது. Furanyl Fantanyl என்ற இந்த மாத்திரையைக் கையால் தொட்டாலே ரசாயானம் தோல் வழியாக ஊடுருவி மூச்சு பாதிப்பு வாந்தி, நினைவிழப்பை ஏற்படுத்தி அடுத்த சில விநாடிகளில் இதய இயக்கத்தைத் நிறுத்தச் செய்து உயிரைப் பறிக்கும் என எச்சரிக்கப்படுகிறது. அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாண புலனாய்வு அமைப்பு விடுத்துள்ள எச்சரிக்கை அறிவிப்பில், கடந்த 4 மாதங்களில் மட்டும் Furanyl Fantanyl மாத்திரையால் 17 பேர் இறந்திருப்பதாகக் கூறியுள்ளது.
Advertisement


Get Newsletter

Seithipunal