ஒலியை விட 9 மடங்கு வேகமாக செல்லும் ஏவுகணை.. சோதனை செய்து அசத்திய ரஷ்யா..!
zircon hypersonic missile in russia
ஒலியை விட 9 மடங்கு வேகமாக செல்லக்கூடிய அதிநவீன ஏவுகணையை ரஷ்யா வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது.
ரஷ்யா தனது நாட்டின் பாதுகாப்பை பலப்படுத்த ஏவுகணை சோதனைகளை மேற்கொண்டு வருகிறது. எதிர்காலத்தில் ஹைபர்சோனிக் ஏவுகணைகளே நாட்டின் முக்கிய பாதுகாப்பு அம்சமாக இருக்கக்கூடும் என அந்நாட்டு அதிபர் தெரிவித்திருந்தார்.

இதையடுத்து, சிர்கான் என்ற அதிநவீன ஏவுகணையை உருவாக்கிய ரஷ்யா, அதனை வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது. 1000 கிலோ மீட்டர் வரை சென்று இலக்கை அழிக்க கூடிய வல்லமை கொண்ட இந்த அதிநவீன ஏவுகணையை ரஷ்யா உருவாகியுள்ளது.
ஆர்க்டிக்கில் உள்ள வெண் கடலில் நிலைநிறுத்தப்பட்டிருந்த அட்மிரல் கோர்ஷ்கோவ் போர்க்கப்பலில் இருந்து சிர்கான் ஏவுகணை வெற்றிகரமாக ஏவி சோதனை செய்தனர். 350 கிலோ மீட்டர் வரை சென்ற ஏவுகணை, அதன் இலக்கை வெற்றிகரமாக தாக்கியதாக ரஷ்ய ராணுவம் தெரிவித்துள்ளது. இந்த ஏவுகணை ஒலியை விட 9 மடங்கு வேகமாக சென்று இலக்கைத் தாக்கக் கூடியது என தெரிவித்துள்ளனர்.
English Summary
zircon hypersonic missile in russia